கொல்கத்தாவை கலக்கடிக்கும் குடும்ப தற்கொலை? மணிக்கட்டை அறுத்துக்கொண்டு பெண்கள் மரணம்.. ஆக்சிடெண்டில் சிக்கிய ஆண்கள்..!
கொல்கத்தாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா EM பைபாஸ் சாலையில் உள்ள அபிஷிக்தா கிராசிங் அருகே இன்று அதிகாலை 3 மணி அளவில் சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், விபத்துக்குள்ளானவர்களின் அடையாள அட்டையை சோதனையிட்டனர். அதில் விபத்தில் சிக்கியது தாங்க்ரா பகுதியை சேர்ந்த பிரனய் டே வயது 45, பிரசுன் டே வயது 43, மகன் பிரியம் டே வயது 14 என தெரியவந்தது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் இருந்ததால் அவர்களை மீட்ட போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.
அங்கிருந்தவர்களை விசாரித்ததில், கார் எதன் மீதும் மோதாமல் நேராக அங்கிருந்த மெட்ரோ தூண் மீது மோதியது தெரியவந்தது. எதற்காக அவர்கள் தூண் மீது மோதினர். கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா? அல்லது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் விபத்தை ஏற்படுத்தினார்களா என குழம்பிப்போன போலீசார் அவர்களின் செல்போன் உதவியுடன் அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயன்றனர். பலமுறை அழைத்தும் எதிர்முனையில் யாரும் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த போலீசார் நேரில் சென்று பார்க்க முடிவு செய்தனர். லைன்சன்ஸில் உள்ள விலாசத்தை குறித்துக்கொண்ட போலீசார் நேரில் சென்றபோது, அங்கு அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
இதையும் படிங்க: அண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த தம்பி.. வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சி.. விபத்து நாடகமாடிய இருவர் கைது!
அந்த வீட்டில் 3 பெண்கள் கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில் அவர்கள் ரோமி டே வயது 38, சுதஷ்னா டே வயது 39, பிரியா டே வயது 15 என்பதும், இவர்கள் விபத்தில் சிக்கியவர்களின் மனைவி, மகள் என்பதும் தெரியவந்தது. உடனே அவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பெண்கள் மூன்று பேரின் கை மணிக்கட்டு வெட்டப்பட்டு உணவு உட்கொண்டதும், அதில் சில மாத்திரைகள் கலக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாக வில்லை.
இந்த பெண்கள் ஒருவேளை தற்கொலை செய்து கொண்டார்கள் என்றால் அவர்களது கணவர்கள் போலீசுக்கு தெரிவிக்காமல் எதற்கு விபத்தில் சிக்கவேண்டும். இவர்களை கொன்றுவிட்டு தப்பிக்கும் போது விபத்தில் சிக்கினார்களா? அல்லது குடும்பமாக அனைவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ஆளுக்கொரு வழியை தேர்ந்தெடுத்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களின் கணவர் மற்றும் மகன் சுயநினைவிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்கள் விழித்த பிறகு மேற்கொண்டு விவரங்கள் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044- 24640050 ஆகிய எண்களை அழைக்கவும்.
இதையும் படிங்க: கண்ணை மறைத்த கள்ளக்காதல்! மனைவியை கண்மூடித்தனமாக வெட்டிசாய்த்த கணவன்..!