×
 

பாஜகவின் விசிக கரிசனம்... அடியெடுத்து வைக்கிற இடமெல்லாம் கேட் போடும் தலைவர்கள்..? கருவேப்பிலையான ஆதவ் அர்ஜூனா..!

அரசியலுக்காக யாரையும் பயன்படுத்தவும் தயங்கமாட்டார்கள். தூக்கி எறியவும் அசர மாட்டார்கள். அதுதானே அரசியல்..! ஆதவ் அர்ஜூனா என்ன கணக்குப்போட்டு வைத்திருக்கிறாரோ..?

‘‘தலித் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அங்கீகாரத்திற்காகவும் கட்சி தொடங்கிய சகோதரர் திருமாவளவன் அவர்களே... தலித் சமூகம் அல்லாத ஒருவர் ஆதவ் அர்ஜுனா தலித் ஒருவர் முதல்வராக வேண்டும் என்று சொன்னதற்கு பெருமைப்படாமல், அவரைக் கட்சியில் இருந்து ஓரம் கட்டி விட்டீர்கள். இப்போது மற்றொரு துணை பொது செயலாளர் வன்னியரசு இரட்டை இலக்க தொகுதியில் நாங்கள் வென்று சட்டசபை செல்வோம் என்று சொன்னதற்கு அது தனிப்பட்ட நபரின் கருத்து என்று ஒதுக்குகிறீர்கள்.

 உங்கள் கட்சியின் நிலைப்பாடு தான் என்ன? தலித் அங்கீகாரம், தலித்திற்கான மரியாதை... அதை பொதுவெளியில் பேசுவதற்கு கூட சுதந்திரம் இல்லையா உங்கள் கூட்டணியில்..? நாடக அரசியலை புறம் தள்ளிவிட்டு தலித் மக்களுக்கான மரியாதை மற்றும் அங்கீகாரத்தை கொடுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு ஒன்று சேர்ந்து அணி திரளுங்கள்’’ எனப் பொங்கி அழைக்கிறார்கள் பாஜக நிர்வாகிகள். 

விசிக மீதான பாஜகவின் அக்கறை குறித்து குறித்து அரசியல் ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘இதுதான் பாஜகவின் பாசாங்கு. ஆதவ் அர்ஜுனா விசிகவில் குழப்பம் ஏற்படுத்த முயன்றது என்பது பாஜகவின் ஆபரேஷன். இதற்கு தலைமை வகித்தது அதிமுக. 

இதையும் படிங்க: 25 தொகுதி வேண்டும்... திமுகவை திணறடிக்கும் திருமா கட்சி... ஆதவ் அர்ஜூனாவுக்காக ஆதங்கப்படும் விசிக..!

அதிமுக – பாஜக கட்சிகள், திமுக கூட்டணி பலமாக இருக்கக்கூடாது என்பதற்காக அதில் ஆதவ் அர்ஜுனாவை இறக்கிவிட்டனர். அவர் தனது  கருத்து, பண செல்வாக்கை பயன்படுத்தி விசிகவை சீர்குலைக்க முயற்சித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. சட்டமன்றத் தேர்தலிலாவது வெற்றி பெற வேண்டும். அதனால் விசிகவை, திமுக கூட்டணியில் இருந்து கூட்டிவர முயற்சித்தார்கள். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.

ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். அவராகவே வெளியேறியதால் அடுத்து விஜய் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், மாற்றுக் கட்சியில் இருந்து பிரச்னைகளோடு வரும் யாரையும் கட்சியில் சேர்ப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள், விஜய் கட்சியில் சேர பல்வேறு வகைகளில் முயற்சித்து வந்தார். ஆனால் அவரது செயல்பாடு தெரிந்ததால் விஜய், அவரை தனது கட்சியில் சேர்க்கவில்லை. காளியம்மாள் நிலைமைதான் ஆதவ் அர்ஜுனாவுக்கும். விஜய் கேட் போட்டதும் ஆதவ் அர்ஜுனா அதிமுகவுக்கு செல்ல முயற்சித்தார்.
 
எடப்பாடி பழனிசாமியிடம் அப்ளிகேஷன் போட்டு, விஜயை சாக்காக வைத்து, விசிகவை தூக்குவது திட்டம். ஆனால், இது லாட்டரிக்கான வேலை என ஆதவ் அர்ஜுனா எக்ஸ்போஸ் ஆகிவிட்டார். இப்போது ஆதவை அதிமுகவில் சேர்த்தால் லாட்டரி பணத்திற்காக சேர்த்ததாக விமர்சனம் எழும். விசிகவிலேயே கட்சி கட்டுப்பாட்டை மீறியவர், அதிமுகவுக்கு வந்தால் என்னாவது என்று பயம் பழனிசாமிக்கு உள்ளது. ஆகையால், அதிமுக ஆதவை சேர்க்க மறுத்துவிட்டது’’என்கிறார்கள். 

ஆனாலும், அரசியலுக்காக யாரையும் பயன்படுத்தவும் தயங்கமாட்டார்கள். தூக்கி எறியவும் அசர மாட்டார்கள். அதுதானே அரசியல்..! ஆதவ் அர்ஜூனா என்ன கணக்குப்போட்டு வைத்திருக்கிறாரோ..? 

இதையும் படிங்க: கட்சி தொடங்கியதையே மறந்து போனாரா விஜய்..? எதிரணிகள் கலாய்ப்பு... தவெக சிலாகிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share