×
 

நாத்திகனாக மாறியதும் லைஃப் ஜாலியா இருக்கு ..நடிகர் சத்யராஜ் பேச்சு

நானும் முடி நிறைய இருக்கும்போது மருதமலையில் முடி காணிக்கை செலுத்தி இருக்கிறேன்.திருப்பதி, பழனி கோவிலிலும் மொட்டை அடித்துள்ளேன் ஆனால் நாத்திகனாக மாறிய பிறகு தான் லைஃப் ஜாலியாக இருக்கிறது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார் .

நானும் முடி நிறைய இருக்கும்போது மருதமலையில் முடி காணிக்கை செலுத்தி இருக்கிறேன்.திருப்பதி, பழனி கோவிலிலும் மொட்டை அடித்துள்ளேன் ஆனால்  நாத்திகனாக மாறிய பிறகு தான் லைஃப் ஜாலியாக இருக்கிறது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார் .

அகில இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 13வது தேசிய மாநாடு திருச்சியில் நடைபெற்றது .அதில் கலந்துகொண்டு பேசிய சத்யராஜ் சினிமாவில் செத்துப் போவது போல் நடித்து விட்டால், அப்படி நடிப்பவர்களுக்கு தேங்காய் சுற்றுவார்கள். கேமராவை பார்த்து ஒரு தடவை சிரிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிஜமாகவே இறந்து விடுவோம் என சொல்வார்கள். 47 வருடங்களுக்கு முன்பு நான் முதல் முறையாக சட்டம் என் கையில் என்ற படத்தில் நடித்தேன். அதில் நான் இறந்து விடுவேன். தேங்காயை தூக்கிக் கொண்டு வந்தார்கள் , கேமராவை பார்த்து சிரிக்க சொன்னார்கள் மறுத்துவிட்டேன். 45 ஆண்டுகளாக நான் நன்றாக தான் இருக்கிறேன். என்றார் .

தொடர்ந்து பேசிய சத்யராஜ் நானும் முடி நிறைய இருக்கும்போது மருதமலை .திருப்பதி, பழனி கோவில்களில்  மொட்டை அடித்துள்ளேன். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை கோயிலுக்கு செல்வோம். எனக்கு திருமணம் ஆகி இருந்தது . நான் எங்கேயாவது செல்ல வேண்டுமென்றால் இந்த ஆன்மீக விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் தற்போது நாத்திகனாக மாறிய பிறகு தான் லைஃப் ஜாலியாக இருக்கிறது.  தனிமனித மகிழ்ச்சிக்கு தடையாக இருப்பது மூடநம்பிக்கைகள் தான். என்று பேசினார் .

மேலும் மூடநம்பிக்கைகளை தூக்கி எறிந்து விட்டால் நீங்கள் உண்மையிலேயே சுதந்திர பறவையாக இருக்கலாம் எனவும்  சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஸ்ரீரங்க கோவிலுக்கு அறங்காவலர் நியமனம் எப்போது ? அமைச்சர் சேகர்பாபு பதில்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share