×
 

ஆரம்பமே இப்படியா? - பாலமேடு ஜல்லிக்கட்டில் போலீசார் - மாடுபிடி வீரர்கள் இடையே தள்ளுமுள்ளு! 

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நடைபெறக்கூடிய உலகப்புகழ்பெற்ற  மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிகட்டு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்வை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கிவைத்தனர். 

பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலம்: 

காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதனையடுத்து உறுதி மொழி ஏற்புடன் வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அடுத்த அதிரடி; இறுதிச்சுற்றில் ஆட்சியர் போட்ட திடீர் உத்தரவு! 

பாலமேடு ஜல்லிகட்டில் 1000 காளைகளும்,900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.  

சிறந்த காளைக்கு முதல் பரிசாக  ஒரு டிராக்டரும் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு கார் வழங்கபடுகிறது. மேலும் 2 வது  பரிசுபெறும் காளைக்கு கன்று குட்டியுடன், நாட்டு பசுமாடும்.  இரண்டாம் பரிசு பெறும் வீர்ருக்கு   பைக் பரிசாக வழங்கபடவுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டை முன்னிட்டு 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


டீசர்ட் வாங்க தள்ளுமுள்ளு: 

பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் தாங்கள் பதிவு செய்த ஆன்லைன் விண்ணப்பத்துடன் பரிசோதனைக்கு சென்று டீசர்ட் வாங்குவதற்காக உள்ளே செல்வதற்காக முயன்றனர். இதனால் ஏற்பட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பேரிகாடுகள் அமைக்கப்பட்டு இருந்தது. பேரிக்காடுகளை மீறியும் வீரர்கள் உள்ளே செல்ல முயற்சித்ததால் காவல்துறையினருக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோர் கவனத்திற்கு.. சிறப்பு ரயில்கள் தயாரா இருக்குங்க.. பத்திரமா வந்து சேருங்க..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share