×
 

'மனசிலாயோ...' விஜய் வீட்டிற்கு செருப்பை வீசி மெசேஜ் கொடுத்த மலப்புரம் மணி..!

விஜய்க்காக எல்லோரும் கண்ணுக்குள்ள எண்ணெய் வைச்சு காத்திருக்காங்க மனசிலாயா? தப்புக்கு வேற தப்பு இருக்கு தப்புக்கு மேல தப்பு இருக்கு தெரியுமா..?

''நானும் விஜய் ரசிகர்தான்… நான் தூக்கி போட்டது செருப்பு இல்ல... மெசேஜ் என தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பை தூக்கி வீசிய நபர் பேட்டி அளித்துள்ளார்.

போலீஸார் கைது செய்ய்வதற்கு முன் செருப்பு வீசியது குறித்து பேசிய அவர், ''என் பேரு மணி,சொந்த ஊர் மலப்புரம். எ.எம்.எஸ் மகன்.செருப்பை ஏன் எறிந்தேன் என்றால் இந்த கேரளாவிலே எவ்வளவோ ஆட்கள் இருக்கிறார்கள். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே எவ்வவு பேர் மலப்புரத்தில் அவ்வளவு வெயிலிலும், மழையிலும் செருப்பு இல்லாமல் எப்படி நடக்கிறார்கள் தெரியுமா? செருப்பில்லாமல் குப்பைகள் எல்லாம் பொறுக்குகிறார்கள். 

அவர்கள் சாப்பாடு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால் அங்கே அப்படி இருக்கலாம். இங்கே இருப்பவர்களை எல்லாம் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என விஜய்க்கு தெரியும். அதற்காகத்தான் மெசேஜ் கொடுக்க செருப்பை போட்டது. லைட்டா ரெண்டு செருப்பை போட்டு விஜய்க்கு மெசேஜ் கொடுத்து இருக்கிறேன். என்றவர் புலி உறுமுது புலி உறுமுது என்கிற விஜயின் பாடலை பாடி தன்னை ஒரு விஜய் ரசிகராகவும் உணர்த்துகிறார். 

இதையும் படிங்க: முதலாம் ஆண்டு விஜய் போட்ட சாப்பாட்டு இலை இதுதான்... 'வாட் இஸ் திஸ் ப்ரோ..?'- கொதிக்கும் தொண்டர்கள்..!


வீட்டுக்குள்ள செருப்பை எறிவதில் தப்பிருக்கி இந்த முத்துப்பாண்டி கோட்டையிலே வந்து பாருடானு விஜய்க்காக எல்லோரும் கண்ணுக்குள்ள எண்ணெய் வைச்சு காத்திருக்காங்க மனசிலாயா? தப்புக்கு வேற தப்பு இருக்கு தப்புக்கு மேல தப்பு இருக்கு தெரியுமா..?

முன்னதாக தவெக  இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ள விஜய் மாமல்லபுரத்திற்கு கிளம்பிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் சென்னை நீலாங்கரை, பனையூரில் உள்ள விஜய்  இல்லத்தின் வாசலில் இளைஞர் ஒருவர்  குழந்தைகள் அணியும் காலனி ஒன்றை கையில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கையில் வைத்திருந்த காலனியை வீட்டிற்குள் வீசினார். இதனால் பதறிப்போன விஜய் வீட்டின் காவலாளிகள் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

விஜய் வீட்டின் மீது காலணி வீசிய சம்பவம் குறித்து தகவல் அறிந்த நீலாங்கரை காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். செருப்பு வீசிய நபர் அங்கேயே சுற்றி திரிந்த நிலையில் அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். நீலாங்கரை காவல் நிலைய உயர் அதிகாரிகளிடம் தகவலை பகிர்ந்து ஆலோசித்து பிறகு அந்த நபரை இருசக்கர வாகனத்தில் அமர்த்தி நீலாங்கரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு நீலாங்கரை போலீசார் நடத்திய விசாரணையில், தான் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், சென்னைக்கு சினிமாவில் நடிப்பதற்காக வந்ததாகவும் திரும்பத் திரும்ப கூறியதாக போலீசார் கூறுகின்றனர். மொத்தத்தில் நிலை பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார் இந்த இளைஞர்..
 

இதையும் படிங்க: 'திஸ் இஸ் ராங் ஸ்பீச் ப்ரோ...' விஜய் பாணியிலேயே பதிலடி கொடுத்த அண்ணாமலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share