×
 

பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன... மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்..!

மூன் மேன் மூன் மேன் ஆஃப் இந்தியா என்று அழைக்கக்கூடிய மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். 

உலகமே உற்றுநோக்கி இருக்கிறது சுனிதா வில்லியம்ஸ் வில்மோரினுடைய விண்வெளி பயணம் குறித்து விண்ணிலிருந்து மண்ணிற்கு அதிகாலையில் தரை இறங்கினாலும் கூட அவர்களுடைய கடுமையான இந்த சவால் நிறைந்த பயணம் எவ்வாறு இருக்கிறது? அவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வார்கள்? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக மூன் மேன் மூன் மேன் ஆஃப் இந்தியா என்று அழைக்கக்கூடிய மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். 

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பும்  பயணத்தினுடைய படிநிலைகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து விவரித்த அவர்,  இதுவரைக்கும் கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை நடக்கக்கூடிய நிகழ்வு மாதிரிதான் விண்வெளிக்கு போறதும் விண்வெளியில இருந்து திரும்பி வருவதும். இப்ப வந்து ஒரு ஒரு விமானம் மேல ஏறிட்டு விமானம் இறங்குற மாதிரி ஒரு நிலைமைக்கு அந்த ஒரு சூழ்நிலைக்கு தான் கிட்டத்தட்ட வந்துவிட்டோம். ஆனால்ல் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குப் போனவுடனேயே திரும்ப முடியவில்லை என்ற ஒரு காரணத்தைத் தவிர,  அவர்கள்  பத்திரமாக தரையிறங்குவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதுவும் டிராகான் கேப்சூல் பலமுறை உபயோகப்படுத்தப்பட்டது. பலமுறை அதனைப் பயன்படுத்தி தான் இங்க விண்வெளிக்கு போனாங்க. அது திரும்பி விண்வெளியிலிருந்து கீழே வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு. 

இதையும் படிங்க: ஆவலுடன் காத்திருக்கிறோம் சுனிதா.. பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நெகிழ்ச்சியாக கடிதம் எழுதிய மோடி..!

விண்வெளியில் நீண்ட காலம் தங்கிவிட்டு வரும், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவங்க கூட வர்றவங்களையும் எப்படி பத்திரமா வெளிய கொண்டு வருவார்கள், பத்திரமாக கொண்டு வந்த பிறகு அவங்கள வந்து திரும்ப நடைமுறை வாழ்க்கைக்கு எப்படி கொண்டு வருவார்கள் என்பது குறித்தும் விளக்கினார். டிராகன் கேப்சூல் களமிறங்கியதும் அவர்களுடைய வைட்டல் பாராமீட்டர்ஸை பரிசோதித்துவிட்டு ஒவ்வொருத்தருடைய உடல் நிலைக்கு ஏற்றார் போல், இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர பயிற்சி கொடுப்பார்கள். ஒரு வாரம், பத்து நாட்களில் கூட அது நடக்க வாய்ப்பிருக்கிறது. சுனிதா வில்லியம்ஸைப் பொறுத்தவரை விண்வெளியில் கமாண்டிங் பொசிஷனில் நல்ல ஆரோக்கியத்துடனும், ஆக்டீவாகவும் இருந்தார். எனவே அவருக்கு வழங்கப்படக்கூடிய அட்டவணைப்படி, எந்த மாதிரியான உணவு சாப்பிடலாம், எப்படி உடற்பயிற்சி செய்யலாம், தூக்கம், நடை போன்ற அனைத்து விஷயங்கள் குறித்தும் அவரது உடல்நிலையைப் பொறுத்து முடிவு செய்வார்கள் என்றார். 

விண்கலம் எப்படி தரையிறங்கும் என்பது குறித்த கேள்விக்கு, இது விமானம் மாதிரி கிடையாது. விண்கலம் கடலில் தான் தரையிறங்கும். அது கடலில் தரையிறங்குவதை முன்கூட்டியே விஞ்ஞானிகள் கண்காணிப்பார்கள். விமானங்களை எப்படி ரேடாரில் பார்க்கிறோமோ, அதேபோல் விண்கலத்தையும் கண்காணிப்பார்கள் பின்னர் கடலில் அது இறங்கியதும் ஹெலிகாப்டர் உதவியுடன் விண்வெளி வீரர்களை மீட்டு வருவார்கள் என்றார். 

இதையும் படிங்க: பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ்..! விண்ணில் பாய்ந்தது விண்கலம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share