தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அலை வீசுகிறது... அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கணிப்பு..!
தமிழகம் முழுக்க முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவான அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது என்றும் இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திமுக வேட்பாளர் சந்திரகுமாரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி உள்பட 45 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். இந்நிலையில் திமுகவின் வெற்றி குறித்தும் அதிமுகவின் நிலை குறித்தும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் முதல்வரின் உழைப்புக்கும், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!
குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டு ‘தோல்விசாமி’ இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார். அதனால்தான் மக்களை சந்திக்க முடியாமலும் திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் ஓடி ஒளிந்து கொண்டார்.
இதையும் படிங்க: அதிமுக, பாஜக, நாதக இடையே மறைமுக கூட்டணி... ஈரோடு தேர்தல் ஒத்திகையா.? கொளுத்தி போடும் திருமாவளவன்.!
வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களின் நலனுக்காகவும் இந்த அரசு பாடுபடும் என அறிவித்து செயல்பட்டார் தமிழக முதல்வர். அதன் காரணமாக இன்று ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுகவுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது; “Pro Incumbency”தான் எங்கும் எதிரொலிக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக் கொண்டிருகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்!” என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 200 இலக்கு... நான் நேரடியாக பரப்புரைக்கு செல்லாமலேயே வெற்றி தொடங்கி வைத்த ஈரோடு கிழக்கு... மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!