×
 

எங்க ஊருக்குள்ளேயே வந்து விடுவாயா..? ம.செ-வை மிரட்டிய அமைச்சர்- அறிவாலயம் கதவை தட்டிய பஞ்சாயத்து..!

'' எங்கள் தொகுதியை வாங்கிவிட்டு எங்கள் ஏரியாவிற்கு உள்ளேயே வந்து விடுவீர்களா? எனக் கொந்தளித்து லட்சுமணன் தரப்பை மிரட்டி இருக்கிறார்கள்.

இரண்டாக இருந்த விழுப்புரம் மாவட்ட திமுக-வை மூன்றாக பிரித்திருக்கும் திமுக தலைமை, புதிதாக பிறந்திருக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக-வுக்கு. அதிமுக-வில் இருந்து வந்த எம்.எல்.ஏ லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. 2021-ல் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் இந்த லட்சுமணன்.

ஒரு காலத்​தில் பாமக இதேபோல் மாவட்​டங்​களைப் பிரித்து அதிகாரப் பரவலை செய்​த​போது அதை ஏளனம் செய்த கட்சி கட்சி திமுக. இப்போது அவர்களே பாமக வழிஇல் சென்று கொண்டு இருக்கிறார்கள். கள்ளகுறிச்​சியை உள்ளடக்கிய ஒன்று​பட்ட விழுப்புரம் மாவட்​டத்​துக்​கும் அமைச்சர் பொன்​முடி தான் செயலா​ளராக இருந்​தார்.


இந்நிலை​யில், தேர்தலை குறி​வைத்து விழுப்புரம் மாவட்ட திமுகவை மீண்​டும் கலைத்​துப் போட்​டிருக்​கும் திமுக தலைமை, புதிதாக விழுப்புரம் மத்திய மாவட்டம் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த லட்சுமணனை பொறுப்​பாள​ராக்கி இருக்​கிறது. கவுதம சிகாமணியை தெற்கு மாவட்ட பொறுப்​பாள​ராக​வும் அறிவித்​திருக்​கிறார்​கள்.

இதையும் படிங்க: 'பொன்' முட்டையிடா வாத்து… பென் கொடுத்த ரிப்போர்ட்... மஸ்தானுக்கு மீண்டும் மா.செ பதவியின் பின்னணி..!

மஸ்தான் செஞ்சி, மயிலம், திண்​டிவனம் தொகு​தி​களுக்​கும், கவுதம சிகாமணி விக்​கிர​வாண்டி, திருக்​கோ​விலூர் தொகு​தி​களுக்​கும், விழுப்பு​ரம், வானூர் தொகு​தி​களுக்கு லட்சுமணனும் பொறுப்​பாளர்​களாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். புகழேந்தி மறைவால் கட்சிக்​குள் வன்னியருக்கான முக்​கி​யத்துவம் இல்லாமல் இருந்​தது. அதை சரி செய்யவே புதிதாக ஒரு மாவட்​டத்​தைப் பிரித்து அதற்கு வன்னியரான லட்சுமணனை பொறுப்​பாள​ராக்கி இருக்​கிறது திமுக.

இங்கு தான் பிரச்னையே. ''எங்களது ஏரியாவில் வந்து பதவியை வாங்கிவிட்டு எங்கள் ஊருக்குள்ளே வந்து விடுவியா..?'' என மாண்புமிகு அமைச்சர் பொன்முடி மிரட்ட, பஞ்சாயத்து அறிவாலயம் கதவைத் தட்டி சமாதானமாகி இருக்கிறது. சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டதில் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணியிடம் இருந்த  இரண்டு தொகுதிகளை எடுத்து லட்சுமணனிடம் கொடுத்தார்கள்.

இதனால் டென்ஷனான பொன்முடி ஆதரவாளர்கள், '' எங்கள் தொகுதியை வாங்கிவிட்டு எங்கள் ஏரியாவிற்கு உள்ளேயே வந்து விடுவீர்களா? எனக் கொந்தளித்து லட்சுமணன் தரப்பை மிரட்டி இருக்கிறார்கள். இதை கேள்விப்பட்ட திமுக தலைமை, பொன்முடி- லட்சுமணன் இருதரப்பையும் அழைத்து சமாதானம் செய்து வைத்திருக்கிறது. அதன்பிறகு ஒருநாள் தாமதமாக தான் தொகுதிக்குப் போய் வரவேற்பை ஏற்றுக்கொண்டுள்ளார் லட்சுமணன். 

இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையில் திமுகவின் பச்சை நாடகம்… புட்டுப்புட்டு வைத்த சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share