மருமகனுக்கு தீ வைத்த மாமியார்..! தீயில் கருகிய உடலை பார்த்து ரசித்த குரூரம்..!
தெலுங்கானாவில் மனைவி மற்றும் மகளை பார்க்க வந்த மருமகனை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமியார் வீட்டார்.!
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் தெகுலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ்வர்லு - அனுராதா தம்பதி. இவர்களின் மகள் காவ்யா 3 ஆண்டுகளுக்கு முன், பல்வஞ்சா மண்டலத்தில் உள்ள தண்டலபோரு கிராமத்தைச் சேர்ந்த பல்லேம் கௌதம் என்னும் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பிடெக் முடித்த கௌதம் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தாலும் குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவிக்குள் அடுக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பல்லேம் கௌதமின் சொத்த பிரித்து வாங்கிவரச் சொல்லியும், தனது அம்மா வீட்டோடு சென்று வாழ்வோம் என்றும் காவ்யா சண்டை போட்டுள்ளார். அதற்கு கௌதம் ஒப்புக்கொள்ளாத நிலையில் இருவருக்கு இடையிலும் தொடர்ந்து சண்டை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: குடிகார அண்ணன் செய்த காரியம்..! ஆத்திரம் தீர கத்தியால் குத்திக்கொன்ற தம்பி.. நடுரோட்டில் வெறிச்செயல்!
இந்நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டை பெரிதாக வெடிக்க, காவ்யா கோவித்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்றுவிட்டார். மனையியை பிரிந்து தனிமையில் வாடிய கௌதம், பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல், அவரது மாமியார் அனுராதா, மாமா வெங்கடேஷ்வர்லு விரட்டி உள்ளனர். அவர்களுடன் காவ்யாவின் தாத்தா, பாட்டியும் கௌதமை வீட்டிற்குள் அனுமதிக்காமல் சண்டை போட்டுள்ளனர்.
மனைவி மற்றும் மகளை பார்க்காமல் செல்லப்போவதில்லை என கௌதம் முரண்டு பிடித்ததால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அவர்கள் கௌதம் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். கௌதமை வீட்டிற்கு வெளியே தள்ளி கதவை பூட்டிக்கொண்டனர். தீயின் சூடு தாங்காமல் கௌதம் அலறி அடித்துள்ளார். அத்தனை கதறிய போதும் அவர்கள் கதவை திறக்கவில்லை. சிறுது நேரத்தில் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் கௌதம் விழுந்துள்ளார்.
படுகாயமடைந்த அவரை பக்கத்து வீட்டுகாரர்கள் கம்மம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் கெளதம் குடும்பத்தினர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கெளதம் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கெளதம் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினின் நாடகம் கலைந்துவிட்டது... சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் டாக்டர் ராமதாஸ் கோபம்.!