×
 

டெல்லியில் பாஜக வெற்றிக்கு முக்கிய 2  காரணங்கள்: "நெட்டிசன்"கள் சொல்வது என்ன? 

டெல்லியில் பாஜக வெற்றிக்கு முக்கிய 2  காரணங்கள்

டெல்லி சட்டசபை தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் முன்னணி வகித்து வருகிறது. 

இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக மிக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டது. இலவசங்களுக்கு எதிரான பாஜக தலைமை கூட இந்த தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். 

பெண்களுக்கு மாதம் ரூ. 2500

தற்போது தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று வரும் நிலையில் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் அது பற்றி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் இந்த வெற்றிக்கு அவர்கள் சொல்வது முக்கியமான இரண்டு காரணங்கள்தான். 

இதையும் படிங்க: டெல்லியில், கடும் குளிருக்கு வீடற்ற 474 பேர் பலி: அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறது, தேசிய மனித உரிமைகள் ஆணையம்

அவற்றில் ஒன்று மகிளா சம்ரிதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி தான்.

ரூபாய் 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு

மற்றொன்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளித்தது டெல்லியில் இருக்கும் நடுத்தர மக்களை வெகுவாக கவர்ந்தது தான் என்றும் பலர் பதிவு செய்து வருகிறார்கள். 

ஆமாம் ..இது உண்மைதான். டெல்லியில் ஆம் ஆத்மி அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தது பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வந்தது. அத்துடன் பஞ்சாப், குஜராத் என படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகரித்து வந்தது. 

இந்த நிலையில் தான் ஆம் ஆத்மியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற அதி தீவிர முயற்சியில் பாஜக இறங்கியது. கட்சித் தலைவர்கள் அனைவரும் மீதும் ஊழல் புகார்கள்.. ஆனால் இவற்றை மறுத்து வந்த ஆம் ஆத்மி கட்சி எந்த ஒரு சோதனையிலும் தங்கள் தலைவர்களிடம் பணமோ அல்லது எந்தவிதமான ஆவணமோ சிக்கவில்லை என்று விளக்கம் அளித்து வந்தனர். என்றாலும் இந்த புகார் நிச்சயமாக மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. 

மாறி மாறி வந்த முன்னிலை 

இதற்கிடையில் டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது முடிவுகள் மாறி மாறி வந்தன. ஆம் ஆத்மி தலைவர்கள் பலர் பின்னணியில் இருந்தாலும் கெஜ்ரிவால் மட்டும் மீண்டும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தார். 

அதேபோல் தொடக்கத்தில் 50 தொகுதிகளில் வரை முன்னணியில் இருந்த பாஜக ஒரு கட்டத்தில் 42 ஆக குறைந்தது. அதே நேரத்தில் 21தொகுதிகளில் முன்னணியில் இருந்த ஆம் ஆத்மி 28 தொகுதிகளில் முன்னிலை வகிக்க தொடங்கியது. 

ஆக, ஆக பாஜக ஆட்சி அமைக்க உறுதியாகிவிட்ட நிலையில் ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவரான சோம்நாத் பாரதி பாஜக ஆட்சி அமைப்பதில் தங்களுக்கு கவலை இல்லை என்று கூறி இருப்பது தோல்வியை எதிர்கொள்ள அவர்கள் தயாராகி விட்டதையே பிரதிபலிக்கிறது. 

இதையும் படிங்க: 500 தொழில் அதிபர்களுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: மோடி அரசு மீது, கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share