×
 

இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யவிடாமல் அராஜகம்.. திமுக மீது நாம் தமிழர் சரமாரி புகார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியைப் பிரசாரம் செய்யவிடாமல் திமுக தடுப்பதாக அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி புகார் கூறியுள்ளார்.

காலியாக உள்ள ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5 அன்று இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக, நாம் தமிழர் கட்சி இடையே இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில்  சீதாலட்சுமி மற்றும் சுயேட்சைகள்  வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மக்களவைத்
தேர்தலில் நாதக 8.22% வாக்குகளைப் பெற்றது. எனவே, நாதகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு சின்னம் இன்னும் ஒதுக்கவில்லை.  என்றாலும் அக்கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

" ஈரோடு கிழக்கில் 2023இல் நடைபெற்ற இடைத்தேர்தலில், வாக்காளர்களைப் பட்டிகளில் அடைத்து வைத்து, பணம், பரிசுப்பொருள் கொடுத்து ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்தனர். இப்போது வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள நாம் தமிழர் கட்சிக்கு தொடர்ச்சியாகவே அனுமதி மறுக்கப்படுகிறது. திமுக ஆட்சியின் அவலத்தை சொல்வதற்கு கூட எனக்கு அனுமதி இல்லை. ஒலிப்பெருக்கி பயன்படுத்தக்கூட காவல்துறை அனுமதி அளிப்பதில்லை.



இதையெல்லாம் மீறி, சட்டத்துக்கு உட்பட்டு தொடர்ந்து இங்கு களத்தில் நிற்போம். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் உறுப்பினர் அலுவலகம் 10 ஆண்டுகளாகப் பூட்டி கிடக்கிறது. தேர்தலின் போது மட்டும் இவர்கள் மக்களைச் சந்திக்கின்றனர். மற்ற நேரங்களில் சந்திக்கப் பயப்படுகின்றனர். நாதகவினர் மீது
வழக்குகளைப் போட்டு  திமுக மிரட்டுகிறது. எங்கள் மீது எவ்வளவு வழக்குகள் போட்டாலும் அதைச் சந்திக்க தயாராக இருக்கிறோம். இதனால் எங்களுக்கு ஆதரவு பெருகும். எங்களுக்கு  எதிராக சில அமைப்பினரை திமுக தூண்டி விடுகிறது.  இடைத்தேர்தலில் சீமானை பொதுக்கூட்டங்களில் பேச விடக்கூடாது என்பது காவல்துறையின் திட்டமாகவே உள்ளது. இது தொடர்பாக தேர்தல் பார்வையாளரைச் சந்தித்து மனு அளிக்க இருக்கிறோம்" என்று சீதாலட்சுமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேரம் பேசியது உண்மையா? - திமுக குறித்து சீதாலட்சுமி சொன்ன ஒற்றை வார்த்தை - பரபரக்கும் நாதக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share