இந்திக்கு எதிராக கையெழுத்து... விஜய்யை அவமதித்த பி.கே... அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்..!
மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT என்கிற ஹேஷ்டேக் உடன் இடம்பெற்ற பேனரில் இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 6 விமர்சனங்களை உள்ளடக்கிய பேனரில் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் நுழைவதை கொண்டாடும் விதமாக ஆண்டு விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் உள்ள நட்சத்திர ரிசார்டில் தொடங்கியுள்ளது. விழாவில், விஜயுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார். மேலும், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் ஆகியோரும் மேடையில் இடம்பெற்றுள்ளனர். முதலில் பாடகி மாரியம்மாள் இசைக்குழுவினரின் கச்சேரியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
விழா மேடைக்கு வருவதற்கு முன்னதாக விழாவில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT என்கிற ஹேஷ்டேக் உடன் இடம்பெற்ற பேனரில் இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 6 விமர்சனங்களை உள்ளடக்கிய பேனரில் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டார். அவர் அடுத்ததாக பேனாவை பிரசாந்த் கிஷோர் கையில் கொடுத்தார், ஆனால் அதை வாங்க அவர் மறுத்ததால் விஜயின் முகமே மாறிப்போனது.
இதையும் படிங்க: 40 சீட்டு வாங்கி எம்.எல்.ஏ ஆக வரவில்லை... ஆட்சியை பிடிக்க வந்துள்ளோம்... ஆதவ் அர்ஜுன் விலாசல்
முதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கையெழுத்திட்டார். அவர் மூன்றாவதாக பிரசாந்த் கிஷோரை கையெழுத்திட அழைத்து பேனாவை நீட்டினார். அதனை வாங்க மறுத்த பிரசாந்த் கிஷோர், வேண்டாம் என்பது போல் ஓபனாகவே கையில் ஜாடை காட்டினார். அந்த தருணத்தில் ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜயின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து வெறுப்பு வெளியானது.
இந்த பெண்கள் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருந்த பேனரில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்தார். இதற்கு காரணம் அவர் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும், அதனால் தான் அவர் கையெழுத்திடவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெகவிற்கு வியூகம் அமைக்கப்போவதில்லை... விஜய் முன்பே பகிரங்கமாக அறிவித்த பிரசாந்த் கிஷோர்...!