பெட்ரோல் குண்டு வீச்சு! இருவர் உயிருக்கு போராட்டம்! ராணிப்பேட்டையில் பரபரப்பு!
ராணிப்பேட்டையில் வாய்த்தகராறு முற்றி இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள திருமால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம், இவர் நேற்று நெல்வாய் பகுதியில் பைக்கில் சென்றுள்ளார். அதேபகுதியில் தமிழரசன், கணபதி ஆகியோர் கிரிக்கெட் ஆடிவிட்டு, வந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். பிரேம் மற்றும் தமிழரசன், கணபதி இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் தலைக்கேறிய பிரேம், தன் கைவசம் இருந்த பெட்ரோல் பாக்கெட்டுகளை இருவர் மீதும் வீசி தீவைத்து விட்டு தப்பியுள்ளார். தீப்பற்றி எரிந்தவர்களை அக்கம்,பக்கத்தினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து தனிப்படை அமைத்து குற்றவாளி பிரேமை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் கோர விபத்து; நேருக்கு நேர் மோதிய லாரி - பேருந்து - 4 பேர் உடல் நசுங்கி பலி!
இதனிடையே, கைது செய்யப்பட்ட நபரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க வேண்டும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கோரி, நெமிலி பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: ரூ.6 கோடி நகைகள் அணிந்து, "மகா கும்பமேளா' பக்தர்களைக் கவரும் தங்கச் சாமியார் ; இதுவரை 8 கோடி பேர் புனித நீராடல்