ராசிபுரம் பள்ளி மாணவன் மரண வழக்கில் திடீர் திருப்பம்..! சக மாணவனால் நேர்ந்த கொடூரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பள்ளி கழிவறையில் மாணவன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ராசிபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்த பெயின்டர் பிரகாஷின் மகன் கவின்ராஜ் சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் புதன்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்ற கவின்ராஜ் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார். அவரை ஆசிரியர்கள் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கவின்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறியும் மருத்துவமனையின் பின்பு திரண்ட மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவின்ராஜ் உயரத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலந்து சென்றனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் பலாத்காரம்... அதிகாரிகளிடம் இருந்து ரூ.25லட்சம் வசூலித்து கொடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!
பின்னர் மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சக மாணவன் தாக்கியதில் கவின்ராஜ் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடத்திய மாணவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையை தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டதால் தாக்கியதாக அவர் கூறியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: மகா சிவராத்திரியில் நடந்த சோகம்.. ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உட்பட 7 பேர் பலி..!