ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் வழக்கில் விலகிய நீதிபதிகள் : அதிர வைக்கும் பின்னணி..!
என்மீது களங்கம் கற்பிக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால் இவ்வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன்'' என்று கூறி தார்மீக அடிப்படையில் அவராக வெளியேறியிருக்க வேண்டும்.
டாஸ்மாக் வழக்கிலிருந்து நீதிபதிகள் விலகிய சம்பவம் அதிர்வலைகளையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளனர்.
கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் விலகுவதாக அறிவித்தனர். வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்'' என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் வழக்கை எதிர்கொண்ட நீதிபதி எம்.செந்தில்குமாரரின் திமுக பின்னணி குறித்து நேற்று நமது தமிழ்வயர் இணையத்தில் ''செந்தில் பாலாஜிக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி… HC-யிலும் உள்குத்து… வெடிக்கும் சமூக ஆர்வலர்'' செய்தி வெளியிட்டு இருந்தோம்… அதன் பிறகு இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊழலை மறைக்க தொகுதி மறுவரையறையைப் பூதாகரமாக்கும் திமுக... மு.க.ஸ்டாலினை விளாசி தள்ளிய நிர்மலா சீதாராமன்.!!
டாஸ்மாக் ஊழலை அமலாக்கத்துறை சோதனை செய்து ரூ.1000 கோடிகளுக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு 25 ம் தேதிவரை விசாரிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்? என கேள்வி எழுப்பி இருந்தார் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் சுப்பு.
இதுகுறித்து அவர், ''ஒரு சாமானியனுக்கு உள்ள சட்டம்தான் இங்கு அனைவருக்கும். அதே போல்தான் தமிழகத்தில் ஆளும் திமுக அரசில் டாஸ்மாக் ஊழலை அமலாக்கத்துறை சோதனை செய்து ரூ.1000 கோடிகளுக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு 25 ம் தேதிவரை விசாரிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது இது எந்த வகையில் நியாயம்?
அமலாக்கத்துறை 25 ம் தேதி வரை டாஸ்மாக் பிரச்சனையை விசாரிக்க தடை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்ரமேஷ், மற்றும் எம்.செந்தில்குமார் என்கிற இந்த இரண்டு பேர் தீர்ப்பளித்தனர். இந்த செந்தில்குமார் என்ற நீதிபதி 2023 ம் ஆண்டுதான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இதற்கு முன்பு இவர் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்திடம் ஜூனியராக பணி புரிந்தார்.
பொதுவாக அரசு வழக்கறிஞர் என்றாலே ஆளும்கட்சியான திமுகவின் ஆட்கள்தான் அந்த பதவிக்கு வர முடியும். அவரிடம் ஜூனியராக இருந்தவர்தான் இப்போது நீதிபதியாக இருக்கும் செந்தில்குமார். மேலும் இவர் அச்சரப்பாக்கம் தொகுதியில் 2006 ம் ஆண்டு 2006 முதல் 2011 திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ சக்கரவல்லி என்ற பெண்மணியின் மகன்தான் இந்த நீதியரசர் செந்தில்குமார்.
அந்த தேர்தலின் போது திமுக வேட்பாளரான தன் அம்மா சக்கரவல்லிக்காக வீடு வீடாகப் போய் உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டவர். திமுகவின் கொடி கட்டிய காரில் வலம் வந்து திமுகவிற்காக பிரச்சாரம் செய்தவர். அவ்வாறு திமுகவிற்கு தீவிரமாக வேலை செய்ததால்தான் திமுக தலைமை வழக்கறிஞருக்கு கீழ் உதவி வழக்கறிஞராக பதவி கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட செந்தில்குமார் என்பவர்தான் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசராக பதவி வகிக்கிறார்.
இப்படி திமுகவின் பின்புலத்தில் இருந்து வந்து நீதிபதியான செந்தில்குமார் இப்போதை திமுக அரசின் ஊழல் வழக்கான டாஸ்மாக் வழக்கை எப்படி நேர்மையான முறையில் விசாரித்து தீர்ப்பளிக்க முடியும்? உண்மையில் அவர் நேர்மையானவர் என்றால் ''இந்த வழக்கு திமுக அரசாங்கத்தின் வழக்கு இப்படிப்பட்ட வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை. உண்மையில் நான் நேர்மையாக இருந்தாலும் என்மீது களங்கம் கற்பிக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால் இவ்வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன்'' என்று கூறி தார்மீக அடிப்படையில் அவராக வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.மாறாக அந்தப் பதவியில் இருந்து கொண்டு திமுகவிற்கு சாதகமான ஒரு தீர்ப்பை கொடுத்து இ ருக்கிறார்'' என கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.150 கோடி ஊழலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. அப்போ ரூ.1000 கோடிக்கு..? பாஜகவுக்கு சீமான் நறுக் கேள்வி.!!