அந்த வீராப்பு என்னாச்சு அண்ணே… பதறியடித்து ஃப்ளைட் பிடித்து ஓடி வரும் சீமான்..!
நீலாங்கரை இல்லம் சென்று விட்டு 6 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று மாலை 6 மணிக்கு சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், 12 வாரத்துக்குள் போலீசார் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. நடிகை விஜயலட்சுமி பாலியல் புகாரில் விசாரணைக்கு சீமான் நேற்று ஆஜராகாததால், அவரது வீட்டு முன்பு போலீசார் நேற்று மீண்டும் இன்று ஆஜராகுமாறு சம்மனை ஒட்டினர். அதை ஊழியர் கிழித்ததால் கைது செய்ய வந்த இன்ஸ்பெக்டரை காவலாளி தாக்கியதோடு, துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சீமான் வீட்டு காவலர்களுக்கு மார்ச் 13 வரை நீதிமன்ற காவல்!
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்,'' என்ன விரட்ட வேண்டிய அவசியம் என்ன? இதுவரை அரசு எதில் இவ்வளவு தீவிரம் காட்டி உள்ளார்கள். சம்மன் ஒட்டியதை என் தம்பி கிளித்துள்ளார். நான் ஏற்கனவே விசாரணைக்கு வந்தவன் தானே, நாளை மறுநாள் வருவேன் என்றேன். நாளையே வர வேண்டுமென்றால் வர முடியாது. அந்த பெண்ணையும், என்னையும் நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும், மீண்டும் விசாரித்தால் அதை தான் கூறுவேன். விசாரிக்காமலேயே இதுதான் நடந்தது என்கிறீர்கள். இதற்கு அஞ்சி பயந்து ஓடுவேன் என நினைக்கிறார்கள். நாளை வர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்'' என காவல்துறைக்கு சவால்விடுத்து இருந்தார்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணி அளவில் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நடிகர் சீமானுக்கு இன்று காலை 11 மணியளவில் ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் காவல்துறையினர் இரண்டாவது சம்மனை அவர் வீட்டின் முன் நுழை வாயிலில் நேற்று ஒட்டி இருந்தனர். இந்த நிலையில் சீமான் சுற்றுப்பயணத்தில் இருப்பதாகவும், ஆகையால் அவர் தற்போது வரமுடியாது என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நேற்று சீமானும் நீங்கள் கூறிய நேரத்தில் வர முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்நிலையில் திருநெல்வேலி பயணத்தை திடீரென்று ரத்து செய்துவிட்டு இன்று மாலை விமானம் மூலமாக சேலத்தில் இருந்து 4.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர் விமான நிலையத்திலிருந்து நீலாங்கரை இல்லம் சென்று விட்டு 6 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று மாலை சீமான் 6 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி போலீசாரிடம் தனது தரப்பு வாதங்களை தெரிவிக்க உள்ளார். இன்று காலை 10:30 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் அவர் ஆஜராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நேற்று முன்தினம் ஆஜராக வேண்டும் என்று கடந்த 24ஆம் தேதி முதல் சம்மன் அனுப்பப்பட்டது.
நேற்று சீமானின் வழக்கறிஞர் தரப்பில் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று நான்கு வார கால அவகாசம் கேட்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது சம்மனை நேற்று மதியம் ஒரு மணி அளவில் வளசரவாக்கம் காவல் துறையினர் நீலாங்கரையில் உள்ள அவர் வீட்டில் 10 நிபந்தனைகளோடு கூடிய சம்மனை நுழைவாயிலில் ஒட்டி இருந்தனர்.
இதையும் படிங்க: பரபரப்பாகும் நீலாங்கரை..! அடுத்த சம்பவத்துக்கு தயாராகும் போலீஸ்... சீமானுக்கு மீண்டும் சம்மன்..!