சரவணனை அமுக்கு..! பிரிந்தே கிடந்தாலும் ஒற்றை ஆளுக்காக இணைந்த அதிமுக மும்மூர்த்திகள்..!
மதுரை மாநகர் அதிமுகவில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரோடு ராஜன் செல்லப்பாவும் கட்சியின் மாவட்ட தலைமையில் இருக்கிறார். மூவருக்குள்ளும் முரண்பாடுகள் பெருகி ஆளுக்கொரு பக்கம் என பிரிந்தே கிடக்கிறார்கள்.
பெரிய பெரிய ஜாம்பவான்கள் மாவட்டச் செயலாளராக இருந்த மதுரையில், வட்டச்செயலாளராகத் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கி, மாநகராட்சி கவுன்சிலராகி, 2011-ல் எம்.எல்.ஏ-வான செல்லூர் ராஜூ அப்படியே அமைச்சராகவும் உயர்ந்தார். அதோடு மாநகரச் செயலாளர் பதவியும் கிடைக்க, தனக்குப் போட்டியாக யாரையும் வரவிடாமல் பார்த்துக்கொண்ட செல்லூர் ராஜூ, கட்சியில் சீனியர்களான ராஜன் செல்லப்பா, சாலைமுத்து, ஏ.கே.போஸ், ராஜாங்கம், எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டவர்கள் முக்கியத்துவம் பெறாத வகையில் பார்த்துக்கொண்டார். 2016-க்குப் பிறகு மதுரை மாவட்ட அரசியலுக்குள் நுழைந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் மல்லுக்கட்டினார். 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கோஷ்டி அரசியலை ஓரங்கட்டி அமைதியானார்.
இந்த நிலையில்தான் அமைச்சர் பி.டி.ஆருடன் ஏற்பட்ட பிரச்னைக்குப் பிறகு பாஜக-விலிருந்து விலகிய டாக்டர் சரவணன் அதிமுக-வில் சேர முயன்றபோது, தனக்குப் போட்டியாக வருவார் என நினைத்த செல்லூர் ராஜூ கட்சியில் சேர்க்க ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால், ஆர்.பி.உதயகுமார் மூலம் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கட்சியில் இணைந்தார் டாக்டர் சரவணன். அதேநேரம் செல்லூர் ராஜூவின் ஆதரவு இல்லாமல் மாநகரக் கழகத்தில் செயல்பட முடியாது என்பதால், ஒருவழியாக செல்லூர் ராஜூவைச் சந்தித்து மரியாதை செய்தார் டாக்டர் சரவணன்.
இதையும் படிங்க: பிரேமலதாவை ஏமாற்றிய எடப்பாடியாரெல்லாம் எம்.ஜி.ஆரா..? செல்லூர் ராஜுவை நெருக்கும் தேமுதிக..!
நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் போட்டியிட யாரும் முன்வராதபோது டாக்டர் சரவணன் துணிச்சலாக முன்வந்தது எடப்பாடி பழனிசாமிக்குப் பிடித்துப்போனது. இந்த நிலையில் மூவருக்குள் முரண்பாடுகள் பெருகி ஆளுக்கொரு பக்கம் இருந்தாலும் டாக்டர்.சரவணன் விஷயத்தில் அவரை மேலே வரவிடக்கூடாது என்பதில் மதுரை மாநகர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மூவரும் ஒற்றைத் திசையில் பயணிக்கிறார்கள்.
மதுரை மாநகர் அதிமுகவில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரோடு ராஜன் செல்லப்பாவும் கட்சியின் மாவட்ட தலைமையில் இருக்கிறார். மூவருக்குள்ளும் முரண்பாடுகள் பெருகி ஆளுக்கொரு பக்கம் என பிரிந்தே கிடக்கிறார்கள்.
ஆனாலும், அறிக்கையோ, பேட்டியோ தங்களிடம் இருந்து மட்டுமே வர வேண்டும் என்பதில் கறாராக இருந்து வருகின்றனர். சமீபகாலமாக மதுரை மாநகரில் அதிமுக நிர்வாகி டாக்டர் சரவணன் அடிக்கடி அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். இது இந்த மூவரையும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கி வருகிறது. முன்பெல்லாம் தான் சார்ந்த மருத்துவத் துறையின் கோரிக்கைகளையே அறிக்கையாக்கி வந்ததால் மூவரும் கண்டுகொள்ளாமல் விட, இப்போதெல்லாம் மாவட்ட தலைமையில் இருப்போர் தெரிவிக்க வேண்டியதை எல்லாம், டாக்டர் சரவணன் அறிக்கையாக வெளியிட்டு வருவதால் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் இந்த முமூர்த்திகளும்.
அத்தோடு அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி.,க்கான தேர்விலும் டாக்டர் சரவணன், எடப்பாடி பழனிசாமியின் சாய்ஸாக இருப்பதால் இந்த மூவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆளுக்கொரு திசையென முரண்பாடு கொண்ட மூவருமே, டாக்டர் சரவணனை அழுத்திக் கீழேயே வைத்திருப்பதில் ஒற்றை திசையில் பயணிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அதிமுகவினரின் அனைத்து சுக, துக்க விஷயங்களில் டாக்டர் சரவணன் கலந்து கொள்வதால் அவர் பக்கமே நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆதரவாக நிற்பதும் இந்த மூவரையும் ஆத்திரம் கொள்ளச் செய்திருக்கிறது. இதனால் மதுரை மாநகர ரத்தத்தின் ரத்தங்கள் டாக்டர் சரவணனுக்காக பரிதாபப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி பிரச்சனைக்கு பாஜக காரணமா? - செல்லூர் ராஜு பதிலடி...!