×
 

கையை கடித்தும் பெண் காவலரை விடாத காமூகன்... தர்ம அடி கொடுத்த மக்கள்... கண்டித்த பாஜக அண்ணாமலை!

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் பாலியல் அத்துமீரலில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என இந்த சம்பவத்தை அண்ணாமலை கண்டித்துள்ளார்.

சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (35). இவர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நேற்று மாலை பணி முடிந்து, தனது வீட்டிற்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் மூலம் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.  


அப்போது தனியான இருட்டான பாதையில் அவர் சென்றுக்கொண்டிருக்கும்போது திடீரென மர்ம நபர் ஒருவர், பெண் காவலர் ராதாவின் பின்புறமாக பிடித்து அவரை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் அவரை தள்ளி விட முயன்றார். ஆனால் அந்த நபர் தன் செயலில் மும்மூரம் காட்டவே அவர் கையை கடித்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார்.


அப்போது நடைமேடையில் நடந்து சென்ற பொதுமக்கள், ஓடி வந்து அந்த நபரை பிடித்து அவரிடமிருந்து பெண் காவலரை மீட்டனர். அந்த இளைஞர் மீது கோபம் கொண்ட பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர். பிறகு பெண் காவலர் ராதா சம்பவம் குறித்து மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: கழிவறைக்குள் வைத்து பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை; அடுத்தடுத்து அத்துமீறிய 3 ஆசிரியர்கள் இரவோடு, இரவாக கைது! 


விசாரணையில் அந்த நபர், சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சத்திய பாலு(23) என தெரியவந்தது. இவன் ரயில் பயணிகள் போல் ரயிலில் பயணம் செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் செயின் பறிப்பு மற்றும் பணம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதுவல்லாமல் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீட்டல் உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டது தெரியவந்தது.


அதைதொடர்ந்து மாம்பலம் ரயில்வே போலீசார் சக்திய பாலுவை கைது செய்தனர். அவன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முதலில் அந்த நபர் பெண் காவலரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் விசாரணையில் அவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது கண்டன பதிவில், “சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது.  அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார். 

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் ஸ்டாலின்?” என கேள்வி எழுப்பியுள்ளார். 
 

இதையும் படிங்க: பள்ளி செல்லும் வழியில் மாணவிகளை மடக்கி பாலியல் தொல்லை... ஆபாச செய்கையில் ஈடுபட்ட 7 பேரை அலேக்காக தூக்கிய காவல்துறை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share