×
 

ஆத்திரப்படுத்திய திமுக அரசு... அலட்சியப்படுத்திய சித்தராமையா..! இதுதான் காரணமா?

அடுத்து கூடுதலாக காவிரி தீர்ப்பாணைய உத்தரவுப்படி 7.5 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விடவேண்டும்  என அழுத்தம் கொடுத்தது தமிழக அரசு.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க  7 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.இதனிடையே அமைச்சர் பொன்முடி, அப்துல்லா எம்.பி. ஆகியோர் கொண்ட குழு கர்நாடகா மாநிலம், பெங்களூருக்குச் சென்று அம்மாநில முதல்வர் சித்தராமையாவை சந்தித்து சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைத்து அதற்கான முதல்வரின் அழைப்புக் கடிதத்தை வழங்கினர்.

இந்நிலையில், இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா எழுதிய பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ''நமது அரசியலை நிர்வகிக்கும் கொள்கைகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் மாநிலங்களின் சுயாட்சி பற்றிய மிக முக்கியமான பிரச்சினைகளை எழுப்பும் 07.03.2025 தேதியிட்ட உங்கள் கடிதம் எனக்குக் கிடைத்தது. குறிப்பாக புதிய மக்கள்தொகை அளவுகோல்களின் அடிப்படையில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகள்.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையைப் பண்ணவே கூடாது.. தமிழக முதல்வர் எதிர்ப்பை தொடர்ந்து கர்நாடக முதல்வர் தடாலடி..!

 

 

இந்தப் பிரச்சினைகள் குறித்து ஒத்த கருத்துடைய நாடுகள் விரிவாக விவாதிக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விரும்பினாலும், எனது முந்தைய பணிகளின் காரணமாக, என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. இருப்பினும், 22.03.2025 அன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, துணை முதல்வர் ஸ்ரீ டி.கே.சிவகுமார் அவர்களிடம் பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அவர் விவாதங்களில் பங்கேற்க உள்ளார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது

.

இந்நிலையில் கர்நாடகவில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அம்மாநில முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் முடிவடைத்துள்ளதாகவும், உரிய அனுமதி கிடைத்தவுடன் கர்நாடகாவில் மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்படும் தெரிவித்து இருந்தார். இதனால், இந்த விவகாரம் மீண்டும் வெடிக்க தொடங்கியது.

இதற்கு பதிலடி கொடுத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “தமிழ்நாடு அனுமதிக்காமல் தலைகீழாக நின்றாலும் மேகதாது அணையை கர்நாடக அரசால் கட்ட முடியாது” என்று தெரிவித்தார். இந்த சூழலில் மேகதாது அணை கட்ட ஒரு மாதத்திற்குள் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தமிழக அரசு தெரிவிக்காவிட்டால், கர்நாடகாவால் மேகதாது அணை திட்டத்தை தொடர முடியாது. 

அடுத்து கூடுதலாக காவிரி தீர்ப்பாணைய உத்தரவுப்படி 7.5 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விடவேண்டும்  என அழுத்தம் கொடுத்தது தமிழக அரசு. இதனால், தமிழக அரசு மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. இதனை மனதில் கொண்டே, தமிழக அரசு சென்னையில் நடத்தும் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: அண்ணே வந்துட்டாரேய்ய்ய்... முதல்வர் ஸ்டாலினுடன் அழகிரி திடீர் சந்திப்பு... உற்சாகத்தில் உடன்பிறப்புகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share