×
 

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி.. செங்கோட்டையன் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்..!

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த ஆலோசனை கூட்டம் அவரது வீட்டில் நடைபெறும் என்றும் தெரிய வருகிறது.

எடப்பாடி அணியில் அதிருப்தியில் இருக்கும் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களோடு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து  ஈரோட்டில் அவசர  ஆலோசனை மேற்கொண்டு வருவது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையன் தனது ஆதரவர்களை தனது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவிநாசி -அத்திக்கடவு திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் தவித்தார் செங்கோட்டையன். அந்த விழாவில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறாததால் அந்த விழாவை தவிர்த்ததாக செங்கோட்டையன் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: எடப்பாடியின் இமேஜை டேமெஜ் செய்ய திட்டம்... செங்கோட்டையனை வைத்து ஸ்கெட்ச் போடும் பாஜக!

இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கும், செங்கோட்டையனுக்கு மோதல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் இருக்கக்கூடிய தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார். அதற்காக தனது ஆதரவாளர்களை அவர் அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய தினம் சற்று நேரத்திற்கு முன் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்த அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார் செங்கோட்டையன். ஏற்கனவே செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த ஆலோசனை கூட்டம் அவரது வீட்டில் நடைபெறும் என்றும் தெரிய வருகிறது.


ஆனால், ''அதிமுக பொதுக்கூட்ட அழைப்பிதழ் வழங்க அந்தியூரில் இருந்து அதிமுகவினர் எனது வீட்டிற்கு வந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையத்தில் தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளதாக வெளியாகும் தகவல் தவறு'' என்று கழக அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: செங்கோட்டையனை ரகசியமாக சந்தித்த அந்த முக்கியப்புள்ளி... பேரத்தைத் தொடங்கியதா டெல்லி..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share