கேஜ்ரிவாலை அதிரவைத்த ஸ்வாதி மாலிவால்..! பதவி கொடுத்தவருக்கே ஆப்பு...
கேஜ்ரிவாலை அதிரவைத்த ஸ்வாதி மாலிவால்
ஆம் ஆத்மியின் பெரும் பின்னடைவுக்கு தனது சொந்தக் கட்சி எம்பி காரணம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆக வேண்டும் அரசியலில் எதுவும் நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம்தான் இந்த சுவாதி மாலிவால் கதை.
சமூக சேவகர் ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர்தான் சுவாதி மாலிவால் தற்போது ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு இந்திய அளவிலான ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அண்ணா ஹசாரேவுடன் கைகோர்த்து நின்றவர் தான் சுவாதி மாலிவால்.
2024 ஆம் ஆண்டு டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபாரிசு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர். உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பிறந்த சுவாதி மாலிவால் 39 வயதை கடந்தவர் ஆவார்.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்: கெஜ்ரிவால் டெல்லியில் மீண்டும் முன்னிலை; முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா பின் தங்குகிறார்கள்
2011 ஆம் ஆண்டு அண்ணா ஹசாராவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஆரம்பித்து பல சமூக சீர்திருத்த மற்றும் ஏழை எளிய மக்களுக்கான பல போராட்டங்களில் பங்கு கொண்டு வெற்றியும் கண்டுள்ளார். தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் 10 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்தவர் தான் இந்த சுவாதி மாலிவால்.
இப்படி சமூக சேவைகளில் சிறந்து விளங்கிய சுவாதி மலிவாலுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்து அழகு பார்த்தார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால் கேஜ்ரிவாலின் உதவியாளர் வைபவ் குமார் வடிவத்தில் விதி விளையாடியது என்று சொல்லலாம். 2024 ஆம் ஆண்டு 13 ஆம் தேதி மே மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்ற சுவாதி மாலிவாளிடம் முறைகேடாக வைபவ் குமார் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை டெல்லி காவல்துறையில் புகாராக அளித்தார் மாலி வால்...அதிலிருந்து தொடங்கியது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தனது சிஷ்யையான மாலி வாலுக்கும் இடையே ஆன பனிப்போர்.
அதன் பிறகு ஒவ்வொரு நாளும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாலிவால் ஈடுபட தொடங்கினார் குறிப்பாக நாடாளுமன்றத்தில் பிஜேபியின் குரலாக மாலிவால் ஒலிக்க தொடங்கினார் இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி ஆம் ஆத்மி ஆளும் டெல்லியில் குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை என ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அந்த மக்களை தூண்டிவிட்டு போராட்டங்கள் நடத்தி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் தலைவலியை கொடுத்தார். இந்த குப்பை போராட்டத்தின் உச்சகட்டமாக தேர்தல் சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பாகவே குப்பைகளை கொட்டும் போராட்டத்தில் மாலிவால் ஈடுபட்டது டெல்லி மக்களிடையே பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது.
அரவிந்த் கெஜ்ரிவால் உடனேயே பயணித்து அவருக்கு எதிராக தேர்தல் சமயத்தில் கடுமையான பிரச்சாரம் மேற்கொண்ட சுவாதிமலிவாலின் பிரச்சாரம் பெரிய அளவில் டெல்லி பகுதியில் ஈடுபட்டது என்றே சொல்லலாம். பல தொகுதிகளில் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி வேட்பாளர்களின் பின்னடைவுக்கு சுவாதி மாலி வாலின் தீவிர பிரச்சாரமும் செயல்பாடுகளும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால் என்னவாகும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகவே பார்க்கலாம்.
இதையும் படிங்க: தட்டித் தூக்கும் பாஜக… துடைப்பத்தை தூக்கி எறிந்த டெல்லி மக்கள்… முடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் அத்தியாயம்..!