×
 

திமுகவை வீழ்த்த வேண்டும்.. எல்லோரும் ஓரணியில் வரலாம்.. அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை கிரீன் சிக்னல்.!!

திமுகவை வீழ்த்த ஓரணியில் திரள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறுகையில், " உள்துறை அமைச்சருடன் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சந்திப்பு குறித்து அரசியல் கணக்கு எதுவுமில்லை. வருங்காலத்தில் திமுகவை வீழ்த்த ஓரணியில் திரள வேண்டும் என தமிழக மக்கள் நினைக்கின்றனர்.

அந்த வகையில் நாங்கள் ஓரணியில் திரண்டு நிற்கிறோம். அந்த ஒற்றை கோட்டில் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். பாஜக யாருக்கும் எதிரி இல்லை. இஃப்தார் நோன்பு திறப்பு விழாவை பாஜக எப்படி நடத்தலாம் என முதல்வர் பேசுகிறார். அவர் அப்படி பேசலாமா? திமுக மட்டுமே நோன்பு திறப்பு விழா நடத்த வேண்டும் எனப் பட்டா போட்டு கொடுத்திருக்கிறார்களா என்ன? முஸ்லிம்கள் பிரதமர் மோடியின் தலைமையை ஏற்றிருப்பதை பார்த்து முதல்வர் ஸ்டாலின் பொறாமைப்படுகிறார்.
தமிழகத்தில் தற்போது 5 முனை போட்டி நிலவுகிறது. அடுத்த ஆண்டு அது மூன்று முனைப் போட்டியாகக் கூட மாறலாம்.

இதையும் படிங்க: இத்துபோன இரும்புக்கரத்தை நம்பி பிரயோஜனம் இல்லை... ஸ்டாலின் அரசை கிழித்த வானதி சீனிவாசன்!!

தீவிரவாத சம்பவத்தை தவிர்த்து பிற வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றிருப்பவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஆனால், மத அடிப்படையில் சிறைக் கைதிகளை பாஜக பார்ப்பதில்லை." என்று அண்ணாமலை தெரிவித்தார்.அ திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு, திமுகவை வீழ்த்த எல்லோரும் ஓரணியில் இணைய வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் விவகாரம்.. திமுக மீது களங்கம் ஏற்படுத்த சதி.. திருமாவளவன் ஆதங்கம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share