இல்லாத பிரச்சனையை கையில எடுக்காதீங்க.. நாங்களும் தமிழர்கள் தான்! லெப்ட் ரைட் வாங்கிய தமிழிசை..!
தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளை குறைத்தால் நாங்களே ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் பாஜகவில் உள்ள நாங்களும் தமிழர்கள் தான் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செந்தூர் கோவிலில் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் கோவில்களில் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
ஆனால் முருகனின் அருள் திமுக அரசிற்கு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறுவதாக சுட்டிக்காட்டிய தமிழிசை சௌந்தரராஜன், இதான் நோன்பு திறப்பு மற்றும் தேவாலயங்களுக்கு செல்லும் முதலமைச்சர் ஏன் முருகர் கோவில்களுக்கு வருவதில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கருணாநிதியிடம் கையேந்தியவர்.. சிறுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்தியவர்.. ஹெச்.ராஜாவை விடுகதை போட்டு திட்டும் தவெக!!
மத்திய அரசு அறிவிக்காத தொகுதி மறு வரையறைக்கு குழுவை அனுப்பும் தமிழக முதலமைச்சர், காவிரி பிரச்சனை, மேகதாது அணை விவகாரத்தில் ஏன் குழுவை அனுப்பி தீர்வு காண முயற்சிக்கவில்லை என்ற கேள்வியை முன்வைத்தார்.ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட நிலையிலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என பேரவையில் முதலமைச்சர் பேசுவதாகவும் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை மறைக்கவே இல்லாத பிரச்சனையை கையில் எடுப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசு தமிழுக்காக தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதற்காக எத்தனை பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது என சொல்ல முடியுமா? இன்று தமிழகத்தில் எத்தனை கல்வி நிலையங்களில் தமிழ் வழி கல்வி உள்ளது எனக் கூற முடியுமா?தமிழக முதல்வர் தமிழகத்தின் மீது முதலில் அக்கறை காட்ட வேண்டும்.
மாறாக, தமிழகத்தின் தோல்வியை மறைக்க தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என திசை திருப்புகிறார். பாஜக தமிழ் மொழிக்கு எதிரானது அல்ல, பிரதமர் தமிழ் மொழியை அதிகம் பயன்படுத்துபவர், பாஜகவில் உள்ள நாங்களும் தமிழர்கள்தான். தமிழகத்தில் மக்களவை தொகுதியை குறைத்தால் அதை நாங்களே ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: விஜய்யை விளாசிய அண்ணாமலை... பதிலடி கொடுத்த புஸ்ஸி ஆனந்த்..!!