கலைஞரின் கோட்டாவில்தான் தமிழிசை எம்.பி.பி.எஸ் படித்தார்.. ஆர்.எஸ்.பாரதி..!
தகுதியின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது என தமிழிசை சொல்ல முடியுமா? இன்று இருமொழிக் கொள்கைக்கு எதிராக கையெழுத்திடுகிறீர்கள் என்றால் நாடு காரி துப்பாதா?
''முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு கலைஞரின் கோட்டாவில்தான் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்தது'' என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாகத் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 65 கட்சிகளில் 58 கட்சிகள் கலந்து கொண்டு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை மனம் திறந்து பாராட்டி பேசினார்கள், தற்பொழுது அதிமுக உள்ள சூழ்நிலையில் யாரையும் திட்ட மனம் வரவில்லை. யார் வேண்டுமானாலும் திமுகவுக்கு வர தயாராக இருக்கிறார்கள். ஆகையால் யாரையும் தவறுதலாக பேச மனம் வரவில்லை.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார் கலந்துகொண்டு அனைவரிடமும் சிரித்து பேசிக்கொண்டு விட்டு வெளியே வந்து நாடகம் ஆடுவதாக பேட்டி அளிக்கிறார். ஆகையால் ஜெயக்குமாரிடம் நான் கேட்பது நாடகத்தில் நீங்கள் போட்டது வில்லன் வேடமா, காமெடியெ வேடமா?
இதையும் படிங்க: இவருக்கு போய் தமிழிசைனு பேரு..! அவங்க அப்பா ரொம்ப வருத்தப்படுவாரு - அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு..!
தமிழிசை சௌந்தரராஜனுக்கு மருத்துவம் படிப்பதற்கான இடம், படித்து வாங்கவில்லை மருத்துவ சீட்டிற்க்கு இடம் வாங்கி கொடுத்ததே கலைஞர் தான். தகுதியின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது என தமிழிசை சொல்ல முடியுமா? இன்று இருமொழிக் கொள்கைக்கு எதிராக கையெழுத்திடுகிறீர்கள் என்றால் நாடு காரி துப்பாதா?
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தாய்மார்கள் ஆகிய நீங்கள் தான் போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்க்க வேண்டும். திமுக ஆட்சி புரிந்தால் தான் தமிழகத்தில் எந்த திரையிலும் இந்தி படம் வெளியிடப்படாது.இது திமுகவின் மிகப்பெரிய சாதனை.
தமிழ்நாட்டில் 100க்கும் 90 சதவிகிதம் தாய்மார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திறக்கு ஆதரவாக உள்ளனர் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இந்த கருத்துக்கணிப்பில்100க்கு 54 சதவிகித மக்கள் ஆட்சியில் திருப்தி அடைந்துள்ளனர். மேலும், 17 சதவீத மக்கள் ஓரளவு திருப்திடைந்துள்ளனர். மொத்தம் 71 சதவிகித மக்கள் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக உள்ளனர்.
மீதமுள்ள 29 சதவிதம் தான் எதிர்ப்பு அலை. இந்த 29 சதவிதமும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆக 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும்” என ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
இதையும் படிங்க: இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் தமிழக பாஜக பயப்படாது... தமிழிசை கைதுக்கு எதிராக அண்ணாமலை ஆவேசம்...!