தெலங்கானா சுரங்க விபத்து: மேலே தெரிந்த ஊழியரின் கை..! சிக்கிய 8 பேரும் பலியா? மீட்பு பணியில் ராணுவம்..!
தெலங்கானாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்திற்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
உலகிலேயே நீளமான சுரங்கப்பாதை!
இந்த பணி கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஸ்ரீசைலம் இடது புற கால்வாய் என அழைக்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை உலகிலேயே மிகவும் நீளமான, அதாவது 44 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
இதையும் படிங்க: தெலுங்கானாவில் கோர விபத்து... இடிந்து விழுந்த சுரங்கப்பாதை...! சிக்கிய தொழிலாளர்களின் கதி என்ன?
சுரங்கப்பாதை பணிக்காக இருபுறமும் இருந்து துளையிடும் எந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன. ஒரு பக்கத்தில் 20 கிலோ மீட்டர் மறுபுறம் 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு தோண்டப்பட்டது.
இந்த பணியில் உத்தர பிரதேசம், ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று 60 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
அப்போது சுரங்க பாதையில் 14-வது கிலோமீட்டர் தொலைவில் திடீரென நீர்க்கசிவு ஏற்பட்டது. இதனை சரி செய்ய சில தொழிலாளர்கள் முயன்றனர். அப்போது சுரங்க பாதையில் இடிபாடு ஏற்பட்டது.
சுரங்கத்திற்குள் பயங்கர சத்தம் கேட்டதும் அங்கிருந்த தொழிலாளர்கள் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதில் சிலர் காயம் அடைந்தனர். அவர்களில் 52 பேர் பாதுகாப்பாக வெளியே வர முடிந்தது.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஜெய் பிரகாஷ், பொறியாளர் மனோஜ் குமார், களப்பொறியாளர் ஸ்ரீநிவாஸ், ஜார்கண்ட்மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் சாஹு, ஜாதக்ஸ், சந்தோஷ் சாஹு மற்றும் அனுஜ் சாஹு மற்றும் ராபின்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2 எந்திர ஆப்ரேட்டர்களான சன்னி சிங் பஞ்சாப்பைச் சேர்ந்த குர்ப்ரீத் சிங் ஆகிய 8 பேர் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மற்ற தொழிலாளர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. உடனடியாக மீட்பு குழுவினர் சுரங்கத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். சுரங்க பாதையின் உள்ளே இருந்து மண் மேடுகள் மற்றும் கான்கிரீட் குப்பைகளை குழுவினர் அகற்றி வருகிறார்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற சிறப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. தண்ணீர் மண் மேட்டில் கலந்து உள்ளே சேறும் சகதியாக இருப்பதால் சிக்கி இருக்கும் 8 பேரும் இடிபாடுகளுக்கு இடையே மூழ்கி இருக்கலாம் என்றும் அஞ்சப் படுகிறது.
மேலே தெரிந்த கை..
கடினமான பயணத்திற்கு பிறகு மீட்பு குழுவினர் சிக்கிய தொழிலாளர் ஒருவரின் கை மேலே தூக்கிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் சிக்கி இருக்கும் எட்டு தொழிலாளர்களும் இழிபாடுகளுக்கு இடையே மூழ்கி இருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மீட்பு பணியை எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது.
மீட்புப் பணியில் ராணுவம்
இதற்கிடையில் இந்திய ராணுவத்தின் ஒரு குழு செகந்திராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர். காலை 9 மணி அளவில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து பேரிடர் மீட்பு படை குழுவினர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் சிறப்பு என்ஜினினீயர் குழுக்கள் வந்து மீட்பு பணிக்கான ஆய்வு தொடங்கினர்.ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுடன் மருத்துவ குழுவினர் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கனரக என்ஜின்கள் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.சுரங்கபாதையில் பெரிய கல்பாறைகள் சரிந்து மூடி உள்ளது. இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளன.
என்ஞ்சின் ஆபரேட்டர் ஒருவர் எச்சரிக்கை விடுத்ததால் தான் தொழிலாளர்கள் பலர் தப்பமுடிந்தது. அதற்குள் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டதால் 8 பேர் சிக்கி கொண்டனர்.
தொழிலாளர்களை மீட்க உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட ராணுவ குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தொழிலாளர்களை உயிருடன் கொண்டு வரும் முயற்சியில் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என மாநில அமைச்சர் உத்தம குமார் ரெட்டி தெரிவித்தார்.
இதையும் படிங்க: KCRக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியவர் கொலை..! தெலுங்கானாவில் அட்ராசிட்டி..!