இயல்பு நிலைக்கு திரும்பியது திருப்பரங்குன்றம்... ஆனா இந்த பகுதிக்குச் செல்ல மட்டும் பக்தர்களுக்கு தடை...!
நேற்று இந்து அமைப்பினரின் போராட்டம் காரணமாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த திருப்பரங்குன்றம் தற்போது இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது.
திருப்பரங்குன்றம் பகுதி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மலை மேல் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்திற்கு செல்ல தொடரும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த இரு நாட்களாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்து முன்னணியின் "மலையை காப்போம்"அறப் போராட்டம் காரணமாக மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு காரணங்களுக்கா 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது. நேற்று கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோயிலுக்குள் பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம் முழுவதும் 3500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றத்திற்குள் நுழைய உள்ள 16 வழிகளிலும் ஃபேரி கார்டு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், விடுதிகள், ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருமண மண்டபங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, போராட்டத்தில் பங்கேற்க வந்ததாக சந்தேகிக்கப்பட்ட இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து முன்னணி மாநில அமைப்பு செயலாளர் சுந்தர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: “மதுரையில் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை”... அரசு விளக்கத்தால் அதிர்ந்த நீதிபதிகள் - காவல்துறைக்கு அதிரடி உத்தரவு!
திருப்பரங்குன்றம் முழுவதும் பல இடங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அத்தியவாசிய நிலையில் பொருட்கள், குடிநீர், உணவுக்கு கடும் சிரமப்பட்டனர். இதனிடையே, நேற்று மாலை இந்து முன்னணியின் 'மலையை காப்போம் ", அறப்போராட்டம் உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்படி நடந்து முடிந்தது. ஒரு மணி நேரம் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பழங்காந்தம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஆனால் மலையுச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய காவல்துறை தொடர்ந்து தடுப்பு வேலி அமைத்து தடை விதித்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று வழக்கம் போல காலை முதலே முருகனை தரிசனம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... எங்கள சீண்டாதீங்க... கொதித்தெழுந்த அண்ணாமலை!