பாஜக ஆட்சிக்கு வந்த முதல்நாள் - அண்ணாமலை எடுத்த சபதம்...!
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது கோயில்களை வைத்து பணப்புழக்கத்தை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்துவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது கோயில்களை வைத்து பணப்புழக்கத்தை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்துவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில் நேற்று துவங்கிய சர்வதேச கோயில் மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் கோயில் நிர்வாக கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா மாநில முதல்வர்கள் கலந்து கொண்டு பேசினர். இரண்டாவது நாளான இன்று கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழக கோவில்களின் நிலை பற்றி எடுத்துரைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கோவில்களை அடிப்படையாக வைத்து பணப்புழக்கத்தை ஏற்படுத்த முடியும். பூரி ஜெகநாதர் கோயில் புதுப்பிக்கப்பட்ட பின் அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ளன. அந்த கோயில்களை மேம்படுத்துவதன் மூலம் கோயில் இருக்கும் பகுதிகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும்.
இதையும் படிங்க: இதுக்கு தான் தடுத்து நிறுத்துனாங்களோ?... திருப்பரங்குன்றம் மலையைப் பார்த்து டென்ஷன் ஆன எல்.முருகன்... இந்து அறநிலையத்துறைக்கு ஆப்பு...!
திருப்பதி கோயிலின் சந்தை மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் என்று ஹார்டுவேர் ஸ்டடி கூறுகிறது. திருப்பதி தேவஸ்தானத்திடம் ரூ.16 ஆயிரம் கோடி வங்கி இருப்பும், பத்து டன் தங்கமும், 2.5 டன் தங்க ஆபரணமும் உள்ளது.1932 ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்டது அதன் சந்தை மதிப்பு இப்போது சுமார் இரண்டரை லட்சம் கோடியாக உள்ளது.1926 ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது. நம்மிடம் இப்போது ரூ.10 ஆயிரம் கோடி சந்தை மதிப்பு கொண்ட கோயில்கள் எத்தனை உள்ளன என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
தமிழக கோவிலுக்கு சொந்தமாக 5 லட்சம் ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் காணவில்லை. எங்களுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது தமிழ்நாட்டில் கோயில்கள் சார்ந்த பொருளாதாரத்தை ஏற்படுத்துவோம் என்று அப்போது கூறினார். பின்னர் தமிழக அரசு தங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பல கோயில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதாக கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கையில் சேகர்பாபு கொத்தனார் வேலை பார்த்து கலசத்தை தூக்கி வைத்து கும்பாபிஷேகம் செய்தாரா? கோயில்களுக்கு கும்பாபிஷேகம் மக்கள் செய்கின்றனர். அறநிலையத்துறை துறை ஸ்டிக்கர் மட்டுமே ஓட்டுகிறது என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 'திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா..? மிரட்டி உருட்டுகிற வேலையெல்லாம் எங்களிடம் வேண்டாம்...' அண்ணாமலை பகீரங்க எச்சரிக்கை..!