×
 

தஞ்சையில் ஒரு நாள் சுற்றுப்பயணம்.. ஆணை வெளியிட்ட தமிழக சுற்றுலாக் கழகம்!

கிரேட் சோழா சர்க்யூட் என்ற ஒரு நாள் சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. 

தஞ்சையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப ஒரு நாள் சுற்றுலா பயணத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளது.  அதன்படி இந்த திட்டமானது நாளை முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் சுற்றுலாப் பயணிகள், முன்பதிவு செய்வதற்கான எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு  செய்தவர்கள் அவர்களின் சொந்த செலவில் தஞ்சாவூர் செல்ல வேண்டுமென்றும் அங்கு சுற்றுலாத்துறை சார்பில் சொகுசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு தஞ்சாவூர் சுற்றி காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த திட்டமானது தினமும் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 7 மணி வரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தஞ்சை பெரிய கோயில், பழையாறை, உடையலூர், தாராசுரம், சோழர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சுற்றுலா பயணி ஒருவருக்கு ரூபாய் 1500 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு சுற்றுலா துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரே நாளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோவில் பயணம்.. மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

முன்னதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் திருச்செந்தூர் ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு மூன்று நாள் ஆன்மீக சுற்றுலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு சுற்றுலா பயணி ஒருவருக்கு 12,300 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைக்காத நிலையில், தற்போது இந்த ஒரு நாள் சுற்றுலா பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலகின் தொழிற்சாலையாக முன்னேறி வரும் இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம் 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share