ரயில் கடத்தல்: பாகிஸ்தானின் பச்சைப்பொய்... பெரும் கொடூரத்துக்கு தயாரான பி.எல்.ஏ..!
பாகிஸ்தான் இராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான் தனது தோல்வியை மறைக்க பொய்யான பிரச்சாரத்தை பரப்பி வருகிறது என பலூச் விடுதலைப் படை கூறுகிறது.
பலுசிஸ்தானில் ரயில் கடத்தலுக்குப் பிறகு, பாகிஸ்தான் இராணுவத்திற்கும், பலூச் விடுதலை படையினருக்கும் இடையிலான போர் மிகவும் ஆபத்தானதாக மாறி வருகிறது. பாகிஸ்தான் இராணுவம் வெளியிடும் தகவல்கள் பொய்யானவை என்று கூறிய பலூச் விடுதலை படை, சண்டை இன்னும் நடந்து வருவதாகவும், பல பணயக்கைதிகளை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளது. பாகிஸ்தான் நடவடிக்கையை முடித்திருந்தால், சர்வதேச பத்திரிகையாளர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என பலூச் விடுதலை படை, பாகிஸ்தானுக்கு சவால் விடுத்துள்ளது.
கடத்தப்பட்ட ரயிலில் பயணித்தவர்களை ராணுவம் மீட்டுவிட்டதாகவும், நடவடிக்கை முடிந்துவிட்டதாகவும் பாகிஸ்தான் கூறுவது பொய் என பலூச் விடுதலை படை தெரிவித்துள்ளது. ''யதார்த்தம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எங்களைப் பொறுத்தவரை, பல முனைகளில் சண்டை இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் இராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான் தனது தோல்வியை மறைக்க பொய்யான பிரச்சாரத்தை பரப்பி வருகிறது என பலூச் விடுதலைப் படை கூறுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் 500 பயணிகளுடன் ரயில் ஹைஜாக்... அதிரவைத்த பலூச் கிளர்ச்சிப் படை...!
பல பணயக்கைதிகளை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதாககவும், 17க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் இங்கு இல்லை. அவர்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளதாகவும் பலூச் விடுதலைப்படை தெரிவித்துள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் இராணுவம் தனது அனைத்து ராணுவ வீரர்களையும். பொதுமக்களையும் மீட்டதாகக் கூறியிருந்தது. ஆனால் பலூச் விடுதலைப்படையில் இந்தத் தகவல் பாகிஸ்தானின் தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியதுடன், தனது தோல்வியை மறைக்க பலுசிஸ்தானில் உள்ள அப்பாவி உள்ளூர் குடிமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் கூறியது. பிணைக் கைதிகளை மீட்க இராணுவம் தவறிவிட்டதாகவும், இப்போது அதன் தோல்வியை மறைக்க பலூச் மக்களைத் தாக்குவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. முன்னதாக, பலுசிஸ்தானில் சாதாரண குடிமக்களுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் நடவடிக்கை எடுத்து வருவதாக பல அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கினோம். ஆனால், பாகிஸ்தான் இராணுவம் அந்த வாய்ப்பை நிராகரித்து மோதலைத் தொடர முடிவு செய்தது. தனது வீரர்கள் கொல்லப்பட்டால், முழுப் பொறுப்பும் பாகிஸ்தான் ராணுவத்தையே சாரும். பாகிஸ்தான் ராணுவம் தங்களது வீரர்களையே கொல்ல தங்களிடம் விட்டுவிட்டதாகவும் பாகிஸ்தானுக்கு பலூச் விடுதலைப்படை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் உண்மையிலேயே போரில் வெற்றி பெற்றிருந்தால், சுதந்திரமான சர்வதேச பத்திரிகையாளர்களை அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என பலூச் விடுதலைப்படை பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக சவால் விடுத்துள்ளது. இதன் மூலம் யார் உண்மையில் தோல்வியடைந்தார்கள், யார் வெற்றி பெற்றார்கள் என்பதை முழு உலகமும் பார்க்க முடியும். உண்மையை மறைக்க பாகிஸ்தான் அரசு ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் கள யதார்த்தத்தை பார்வையிட பாகிஸ்தால் தடுத்து வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இந்தப் போர் இப்போது எங்களது கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், பாகிஸ்தான் ஒவ்வொரு முனையிலும் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. அந்த அமைப்பு முழு பலத்துடன் போராடுவதாகவும், இந்தப் போராட்டத்தை அவர்களின் சொந்த விருப்பப்படி முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் கூறியது. பலூச் விடுதலைப்படையினரிடம், பாகிஸ்தான் இராணுவம் இந்தப் போரில் தோற்றது மட்டுமல்லாமல், அதன் தோல்வியை மறைக்க தொடர்ந்து பொய்யான கூற்றுக்களையும் கூறி வருகிறது.
இதையும் படிங்க: பலுசிஸ்தானின் பஷீர்... பாகிஸ்தான்- சீனாவுக்கும் ஒரே நேரத்தில் கற்பித்த பி.எல்.ஏ தளபதி..!