பணம் கேட்டா கொடுக்க மாட்டியா? பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்.. தலைமறைவான தவெக நிர்வாகிக்கு வலை!
சென்னை திருநீர்மலை அருகே பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகிக்கு போலீஸ் வலை
சென்னை பல்லாவரம் அருகே திருநீர்மலை பிரதான சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.
இங்கு 1.5% கமிஷன் பெற்றுக் கொண்டு கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்து பணம் வழங்குவதாக கூறப்படுகிறது.
அதே பகுதியை சேர்ந்த தவெக திருநீர்மலை பொருளாளர் இளங்கோ, அவ்வப்போது இந்த பெட்ரோல் பங்கில் கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்து 500, 1000 ரூபாய் என பணம் பெற்று வந்துள்ளார்.
இதையும் படிங்க: தெறி அரசியல்... திமுக பாணியை கையில் எடுக்கப்போகும் விஜய்... கிடுகிடுக்கும் அண்ணா அறிவாலயம்..!
நேற்று இரவு அதேபோல், பெட்ரோல் பங்க் சென்ற இளங்கோ, அங்கு பணியில் இருந்த ரஞ்சித்குமாரை அழைத்து,
கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்து 10 ஆயிரம் ரூபாய் தருமாறு கூறியுள்ளார்.
எங்ககிட்ட அவ்ளோ பணமில்லை என ரஞ்சித் குமார் மறுத்த நிலையில், மூவாயிரம் ரூபாயாவது ஸ்வைப் செய்து தரும்படி இளங்கோ கேட்டுள்ளார்.
பணம் தரமுடியாது. இனி இங்க ஸ்பைவ் செய்து பணம் தருவதில்லை என ரஞ்சித் குமார் கூறினார்.
இப்படியே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இளங்கோ, பெட்ரோல் பங்க் ஊழியரை கடுமையாக தாக்கினார்.
இது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது. இதனடிப்படையில் இளங்கோ மீது புகாரளிக்கப்பட்ட போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னதாக பெட்ரோல் பங்க் அமைந்துள்ள நிலம் புறம்போக்கு நிலம் என சென்னை ஐகோர்ட்டில் இளங்கோ புகார் மனு அளித்திருந்தார்.
அதில் இளங்கோ தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் பெட்ரோல் பங்க் உரிமையாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இதனை மனதில் வைத்துக்கொண்டு வேண்டுமென்றே இளங்கோவை கோவப்படுத்துமாறு பேசி, ஆத்திரத்தை மூட்டி பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவரை இவ்வாறு சிக்க வைத்துள்ளதாக இளங்கோவின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாறும் களம்… வியூக சாலை… அரசியலில் விஜயின் நண்பர்கள் யார்..? எதிரிகள் யார்..?