#BREAKING: டிரம்பின் மிரட்டலுக்குப் பணிந்தார் ஜெலன்ஸ்கி..! 30 நாட்களுக்கு போர் நிறுத்தம்
உக்ரைன் அமெரிக்காவின் 30 நாள் உடனடி போர் நிறுத்த முன்மொழிவை ஆதரித்துள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற அமெரிக்கா உக்ரைன் இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, உக்ரைன் அமெரிக்காவின் 30 நாள் உடனடி போர் நிறுத்த முன்மொழிவை ஆதரித்துள்ளது.
இது தொடர்பாக,செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், நீண்டகாலமாக நடைபெற்று வரும் போர் மோதலில் ஒரு திருப்புமுனையை இந்த ஜெட்டா பேச்சு வார்த்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, அமெரிக்கா உக்ரைனுக்கு இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை பகிர்வு மீதான கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்த போர் நிறுத்தம், இரு தரப்பினரின் ஒப்புதலுடன் நீட்டிக்கப் படவுள்ளது மேலும் ரஷ்யாவின் ஒப்புதல் மற்றும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படுவதைப் பொறுத்து இந்த போர் நிறுத்தம் நீடிக்கும்.
இதையும் படிங்க: X தளம் மீது சைபர் அட்டாக்..! உக்ரைனை கைக்காட்டும் எலான் மஸ்க்..!
“உக்ரைன் அமெரிக்காவின் 30 நாள் உடனடி போர் நிறுத்த முன்மொழிவை ஏற்க தயாராக உள்ளது,” என்று உக்ரைன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரஷ்யாவின் பரஸ்பர ஒத்துழைப்பே அமைதியை அடைவதற்கான திறவுகோல்” என்று அமெரிக்கா ரஷ்யாவுக்கு தெரிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் நாட்டிலுள்ள தாதுக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை “விரைவில்” முடிவு செய்யவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
பிப்ரவரி 28 அன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனான தோல்வியடைந்த சந்திப்பைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் உதவியை நிறுத்தியிருந்த நிலையில், இப்போது அமெரிக்கா மீண்டும் பாதுகாப்பு உதவி மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பை தொடங்குகிறது.
ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைனின் போராட்டத்திற்கு இது பலம் சேர்க்கும்.
ஜெட்டா பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனுக்கும் கீவ்-வுக்கும் இடையிலான அரிய ஒருங்கிணைப்பாக இது பார்க்கப்படுகிறது. ஆனால் ரஷ்யாவின் பதில் குறித்து சந்தேகம் நீடிக்கிறது. ரஷ்ய அதிகாரிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
போர் நிறுத்தம் ஏற்கப்பட்டால், பதற்றம் குறைப்பு மற்றும் இன்னும் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கலாம். இதில்அடுத்த நகர்வு கிரெம்ளின் மாளிகை எடுக்கும் முடிவுகளை பொறுத்து உள்ளதால், ஒட்டுமொத்த உலகமே உன்னிப்போடு கவனித்து வருகிறது.
இதையும் படிங்க: உக்ரைனை அதிர வைத்த ரஷ்யப் படைகள்..! எரிவாயு குழாய் பின்னால் பயங்கரத் திட்டம்..!