×
 

நாட்டையே உலுக்கிய வேங்கைவயல் சம்பவம்; சந்தேகத்தை கிளப்பும் திருமா...!

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை ஏமாற்றம் அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை ஏமாற்றம் அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வழக்கமான காவல்துறையினர் குற்றப்பிரிவைச் சார்ந்தவர்கள் விசாரிக்கக் கூடாது சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை என்று நாம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்  சிபிசிஐடி விசாரணை நியமிக்கப்பட்டது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மேலாக இந்த விசாரணை நடத்தி முடித்து, இப்போது பாதிக்கப்பட்ட மக்களின் மீதே இவர்கள்தான் அந்த குற்றத்தை செய்தார்கள் என்று வழக்கு பதிவு செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கிற சிறப்பு நீதிமன்றம் இந்த குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 

 தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் விடுக்கிற வேண்டுகோள் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.  இன்றைக்கு வேங்கவையல் கிராமத்தைச் சார்ந்த பொதுமக்களும் விடுதலைச் சிறுத்தைகளும் இந்த போக்கை கண்டித்து கிராமத்திலேயே அமைதியான முறையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள், அவர்களை அச்சுறுத்தி காவல்துறையினர் பலரை கைது செய்திருக்கிறார்கள். குறிப்பாக விடுதலைச்
சிறுத்தைகள் இயக்கத்தைச் சார்ந்த அந்த பகுதியைச் சார்ந்த வட்டாரத்தைச் சார்ந்த பொறுப்பாளர்களை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல தோழர்களை கைது செய்து சிறைப்படுத்திருப்பது மிக வன்மையாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.

இதையும் படிங்க: “ஒரு அடி கூட உள்ள வர முடியாது” - திருமாவுக்கு நேரடி சவால்; போலீஸ் வளையத்திற்குள் வேங்கைவயல்! 

திமுக அரசு சமூக நீதியின் பக்கம் நிற்கும் என்ற நம்பிக்கை இன்னும் எங்களுக்கு உள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதற்கு இந்த அரசு துணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.  சிபிசிடி சிஐடி தாக்கல் செய்திருக்கிற இந்த குற்றப்பத்திரிக்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது. 

தமிழ்நாடு முதலமைச்சருடைய நேரடி கண்காணிப்பில் காவல்துறை இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது இந்த விசாரணை அவருடைய முழு கவனத்தில் இருக்கக்கூடிய சூழல்ல எப்படி தவறு நடந்திருக்கும் என்பது மிகுந்த அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கிற வரையில் மக்களோடு சேர்ந்து போராடுவோம் ஆதாரங்கள் என்ற பெயரில் சில புகைப்படங்கள் சில வீடியோ கிளிப்ஸ் எல்லாம் வெளியிட்டு இருக்கிறார்கள். இது ஏற்கனவே வெளியே வந்ததுதான். அது ஒன்னும் புதிய தகவல்கள் கிடையாது. அந்த போட்டோ, ஆடியோ, வீடியோ எல்லாமே வாட்ஸ்அப்பில் பரவியவை தான். அதில் புதியது எதுவும் கிடையாது. சிபிசிஐடி தரப்பில் டிஎன்ஏ டெஸ்ட் பண்றதா சொல்லி இருந்தாங்க, அதுக்காகத்தான் இவ்வளவு நாள் எடுத்து கிட்டதாகவும் கூறியிருந்தார்கள். ஆனால் டிஎன்ஏ பரிசோதனை மூலமாக இது உறுதிப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. 

சீமானுடைய போக்கு மிக கவலை அளிக்கக் கூடியதாகவும், அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அவர் ஏன் இப்படி செயல்படுகிறார் இவ்வாறு பேசுகிறார் என்று விளங்கவில்லை. அவரை யார் இப்படி உசுப்பி விடுகிறார்கள் என்றும் தெரியவில்லை. சீமானுடைய போக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நேர் எதிரானதாக இருக்கிறது. மிகவும் ஆபத்தான அரசியலை அவர் பேசுகிறார். அது அவருக்கும் நல்லது தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல, அவரை பின்பற்றக்கூடிய தோழர்கள் மிக கவனமாக இவற்றை அணுக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். 
 

இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. பட்டியலினத்தவர் மீது குற்றச்சாட்டு.. சிபிஐ விசாரணை கேட்கும் திருமாவளவன்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share