நேற்று அப்செட்... இன்று ஆப்சென்ட்... திமுக கூட்டணிக்கு ‘டாடா’ காட்டப்போகிறாரா வேல்முருகன்?
இனியும் திமுக கூட்டணியில் வேல்முருகன் தொடர வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு பாமகாவுடன் அவர் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுவது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வேல்முருகன் அதிக பிரசிங்கித்தனமாக பேசுகிறார் என்றும் அவர் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய நிலையில், இந்த கசப்புகளை தொடர்ந்து இனியும் திமுக கூட்டணியில் வேல்முருகன் தொடர வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு பாமகாவுடன் அவர் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுவது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பன்றொட்டி தொகுதியில் வெற்றி பெற்றார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். திமுக கூட்டணியில் அவர் இருந்த தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆளும் திமுக அரசுக்கு எதிராக பேசி வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வேல்முருகனை கூறியதாக தகவல் வெளியானது. இச்சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து வேல்முருகன் பேசியதைத் தொடர்ந்து திமுக கூட்டணிக்குள் அதிருப்தி சற்றே தணிந்ததாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: என்ன நடவடிக்கை எடுத்தாலும் மகிழ்ச்சிதான்: டேக் இட் ஈஸி வேல்முருகன்..!
இந்நிலையில்தான் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பு சபாநாயகர் இருக்கைமுன்பு ஆவேசமாக வேல்முருகன் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “பேசுவதற்கே போராடிக் கொண்டிருந்தேன். அதனால்தான் நாடாளுமன்றத்தில் எப்படி அவைத் தலைவர் முன்பு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார்களோ?, அதேபோல் நானும் எனது இருக்கையிலிருந்து சென்று அவைத் தலைவர் முன்பாக நின்று என் கருத்தை முழுமையாக பதிவு செய்ய நேரம் கொடுங்கள் என்று கேட்டேன். இது தவறா இதற்கு சேகர் பாபு “நீ எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி பேசுகிறாய்” என்று ஒருமையில் என்னை பேசினார். உடனே அவரிடத்தில் சென்று இதுபோன்று ஒருமையில் பேசக்கூடாது என்று சொன்னேன். கலைஞர் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நடைமுறைப்படுத்தவில்லை என்று சொன்னேன். இது எப்படி வரம்பு மீறிய செயலாகும் என்று ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார்.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களை வேல்முருகன் கைநீட்டி பேசுவது, ஒருமையில் பேசுவது என்பது ஏற்புடையது அல்ல என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். கடந்த சில மாதங்களாகவே திமுக கூட்டணிக்கு எதிராக பேசிவரும் வேல்முருகன் இப்போது பகீர் சங்கமாகவே பேச ஆரம்பித்து விட்டார். இதனால் அவர் இனிமேலும் கூட்டணியில் நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. நேற்று கடும் அப்செட் உடன் சட்டப்பேரவையை விட்டு சென்ற வேல்முருகன், இன்று சட்டப்பேரவைக்கு வரவே இல்லை என்பது அரசியல் வட்டாரத்தில் ஏராளமான கேள்விகள் எழ காரணமாக அமைந்தது.
இச்சூழலில்தான் வேல்முருகன் பாமகவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக அண்மையில் பாமகவின் நிழல் பட்ஜெட்டை பாமக நிர்வாகிகள் வேல்முருகனிடம் கொடுத்ததாகவும, ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் திமுக கூட்டணியுடனான இந்த மோதல் போக்கை தொடர்ந்து பாமகவுடன் கைகோர்க்கும் முயற்சியில் வேல்முருகன் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியுள்ளன.
இதையும் படிங்க: கலாய்க்கும் துரைமுருகன்… திமுகவுக்கு எதிராக வெடிக்கும் வேல்முருகன்: ஆட்டி வைக்கிறதா அதிமுக..?