×
 

இஃப்தார் நோன்பில் பங்கேற்கும் விஜய் அறிவிப்பு..! ஏன் ப்ரோ இப்படி.? அதிர்ச்சியில் இஸ்லாமியர்கள்..!

எல்லாவற்றிற்கும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடும், பதில் சொல்லும் விஜய், இந்த அறிப்பை மட்டும் ஏன் இங்கு பதிவிடவில்லை என்கிற கேள்வி எழுகிறது.  

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.அரங்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று சிறப்பிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி. வரும் 7ஆம் தேதி (07.03.2025) மாலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கழகத் தலைவர் அவர்கள், இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். 

மக்ஃரிப் தொழுகை முடிந்ததும் கழகத்தின் சார்பில் இஃப்தார் விருந்து நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து விஜய் முன்பு நடிகராக இருந்தபோது அவர் இஃப்தார் நோன்பில் கலந்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு அவரது தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.  ''எங்கத் தலைவர் கட்சித் தொடங்கியது மட்டும் தான் 2024ல்.. 30 வருடங்களாக மாணவர் முதல் மீனவர் வரை, அனைத்து மதத்தினர்களுக்கும், அனைத்து சமூகத்தினருக்கும் சொந்தமாக நிற்கும் ஒரேத் தலைவர் எங்கள் விஜய்'' எனக் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தவெக மீது விஷம கருத்துகள் திணிப்பு... புஸ்ஸி ஆனந்த் கண்டனம்!!

 

ஆனால், இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ்தளத்தில் பதிவிடவில்லை. ''தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்'' என்கிற பதிவிற்கு பிறகு அவரது எக்ஸ் தளத்தில் எந்தப் பதிவுகளையும் காணவில்லை. இதனால், ஏன் விஜய் இந்த அறிவிப்பை உங்கள் பதிவாக வெளியிடவில்லை எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எல்லாவற்றிற்கும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடும், பதில் சொல்லும் விஜய், இந்த அறிப்பை மட்டும் ஏன் இங்கு பதிவிடவில்லை என்கிற கேள்வி எழுகிறது.  

இதையும் படிங்க: அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் இணைப்பா..? இப்படி சொல்லிட்டாரே அதிமுக மூத்த தலைவர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share