'விஜயால் அதிமுகவுக்கு பலம்..! சிவகாசியில் கூட்டணி வெடியை பற்ற வைத்த எடப்பாடியார்..?
ஆனால் இன்று அவரது நிதானமான நடவடிக்கையை பார்க்கும்போது அரசியல் தலைவர்கள் இயங்கும் அளவிற்கு பக்குவப்பட்ட அரசியலை நோக்கி செல்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. சசிகலா, தினகரன், ஓபிஎஸ் நீக்கப்பட்ட பின், தென் மாவட்டங்களில் அக்கட்சியின் ஓட்டு வங்கி படுபாதாளத்திற்கு சென்றுள்ளது. இருந்தும் நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என அடம்பிடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.பா.ஜ.கவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அதேநேரம், ஆளும்கட்சியான தி.மு.க கூட்டணியில் சலசலப்புகள் எழும்.அதன் மூஊலம் பழமான கூட்டணி அமைக்கலாம் என்கிற எடப்பாடியாரின் கணிப்பும் பொய்த்து வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியை எடப்பாடியாரால் எதிர்த்து களமிறங்க முடியாது என அதிமுகவினரே திகைத்து நிற்கின்றன. இப்போதைக்கு விஜய் கைகொடுத்தால் மட்டுமே அரசியலில் பிழைக்கலாம் என்கிற இக்கட்டான நிலை. விஜயுடன் கூட்டணி அமைப்பது தான் அதிமுகவுக்கு இணக்கமான அம்சம். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை விஜய் இதுவரை விமர்சிக்கவில்லை. இது அதிமுகவுக்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட்.
ஆனால், ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத கட்சியை விமர்சனம் செய்வதில் அர்த்தம் இல்லையே என்று, விஜய் தரப்பு விளக்கம் அளிக்கிறது. இதில், நியாயம் இருந்தாலும், பாரம்பரிய திமுக, எதிர்ப்பு ஓட்டுகளை வைத்துள்ள அதிமுகவை விமர்சிப்பது, தன் புதிய கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது என்பதை விஜய் உணர்ந்துள்ளார். இதையே அவரது மவுனம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எதிர்ப்பு ஓட்டுகள் பல கட்சிகளுக்கு பிரிந்து செல்வதால், பிரதான கட்சி ஆட்சியை பிடிக்கவோ, தக்க வைக்கவோ முடிகிறது.இந்த பின்னணியில் தான், பலமான கூட்டணிக்கு அவசியம் ஏற்படுகிறது. எடப்பாடி பழனிசாமியும், விஜயும் அப்படிப்பட்ட ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இளைஞர் பட்டாளத்தை எளிதில் திரட்டும் சக்தி பெற்றவர் என்பதை, முதல் மாநாடு வாயிலாக விஜய் நிரூபித்து உள்ளார்.ஓட்டு வங்கியில் விரிசல் விழுந்தாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் வெளியேறவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமியும் நிரூபித்துள்ளார். இருவர் பலமும் சேரும் போது, திமுகவின் வலுவான கட்டமைப்பை சேதாரப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.தனித்து நிற்பேன் என்று முழக்கம் எழுப்பி, ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு சதவீதம் அதிக ஓட்டு வாங்கி வாழ்நாள் முழுதும் கோட்டை வாசலுக்கு வெளியே நின்று வேடிக்கை பார்க்க விஜய் விரும்பவில்லை.
இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆப்பு வைத்த விஜய்… ஒற்றை அறிவிப்பில் அண்ணனை கதறவிட்ட தம்பி..!
ஆட்சி கட்டிலுக்கு கூட்டணி தான் பாதை என்று நாடெங்கும் உறுதியான பிறகு, என் வழி தனி வழி என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி என்று அவர் புரிந்து கொண்டிருக்கிறார். அதேவேளை, பத்தோடு பதினொன்றாக எந்தக் கூட்டணியிலும் சேர அவர் தயாராக இல்லை. அதுதான் அதிமுக கூட்டணியை நோக்கி நகர வைத்துள்ளதாக விஜயயை அறிந்தவர்கள் கூறிவருகின்றனர்.
அதனால் தான் "இன்றைக்கு சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துகொண்டு அடுத்த எம்.ஜி.ஆர் நான் தான் என பேசுகிகன்றனர்.நான்தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள். ஒருக்காலமும் அது நடக்கவே நடக்காது. இது திராவிட பூமி, இங்கு நீதி கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் எப்போதும். இதுதான் தமிழகத்தின் சூழல். புதிதாக கட்சி தொடங்கியவர்களால் அரசியலில் வரும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள முடியாது, பிரச்சனைகளை சமாளிக்க முடியாது, அவர்களால் வெள்ளி விழா கூட கொண்டாட முடியாது. வெறும் 30 நாட்களுக்குள் ஓடி விடுவார்கள்" என மூன்று மாதங்களுக்கு பேசியிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூட இப்போது ஆஹா, ஓஹோவென இன்று விஜயை புகழ்ந்து தள்ளி புல்லரிக்க வைத்து இருக்கிறார்
''விஜயின் நிதானத்தைப் பார்க்கும்போது அவர் பக்குவப்பட்ட தலைவராகத் தெரிகிறார்.விஜய் உள்ளிட்டோரும் திமுகவை விமர்சிப்பது அதிமுகவுக்குத்தான் பலம்.2011ல் திமுக ஆட்சிக்கு வந்ததைப்போல் 2026ஆம் ஆண்டிலும் வரலாறு திரும்பும். நடிகர் விஜய் அரசியலுக்கு வரும்போது இவரால் நிலைக்க முடியுமா? என்ற ஐயப்பாடு இருந்தது உண்மைதான். ஆனால் இன்று அவரது நிதானமான நடவடிக்கையை பார்க்கும்போது அரசியல் தலைவர்கள் இயங்கும் அளவிற்கு பக்குவப்பட்ட அரசியலை நோக்கி செல்கிறார். விஜய் திமுக மீது வைத்துள்ள அதிருப்தி அதிமுகவிற்கு பலமாக உள்ளது. திமுகவின் ஆணவ அரசியலை அடக்க வேண்டும் என்ற பிரதான கொள்கையோடு விஜய் கட்சி துவங்கியுள்ளது வரவேற்கத்தக்கது" என இன்முகம் காட்டியுள்ளார் ராஜேந்திர பாலாஜி.
அதிமுக - தவெக கூட்டணி கணக்குகள் தற்போதே தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகத்தை, ராஜேந்திர பாலாஜியின் இன்றைய பேச்சு எழுப்பியிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: நீங்க முடிவு பண்ணிட்டு வாங்க பிறகு பார்க்கலாம்....தவெகவுக்கு மூத்த அரசியல் ஆலோசகர்கள் நிபந்தனை