×
 

கட்சி கொடியும் இல்ல, கட்சி பேரும் இல்ல, அரசியலும் பேசல... இஃப்தாரில் விஜய்யை கவனிச்சீங்களா?

தமிழகத்தின் வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். 

தமிழகத்தின் வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். ஏற்கெனவே ரமலான் நோன்பில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன் தினம், விஜய் இன்ஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்பார் என்றும் அன்று ஒரு நாள் முழுவதும் நோன்பு இருந்து இஃப்தாரை நிறைவு செய்வார் என்றும் அக்கட்சியின் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார். 

தொடர்ந்து இன்று ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இஃப்தாருக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புஸ்ஸி ஆனந்த் இஸ்லாமியர்களை சந்தித்து நோன்பில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதனுடன் 3000 பேருக்கு இஃப்தார் முடிந்ததும் மட்டன் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பரபரப்பான சூழலில் எதிர்பார்த்தப்படி இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுக்கு விஜய் வந்தார். அவர் தலையில் தொப்பி, வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டியுடன் வந்தார்.

இதையும் படிங்க: எங்கள் கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்துறீங்களா?... தவெகவினர் இஸ்லாமியர்கள் இடையே கடும் வாக்குவாதம்...!

இந்த இஃப்தாரில் 15க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. நோன்பு திறக்க வருவோருக்கு மட்டன் பிரியாணி, சமோசா, நோன்பு கஞ்சி, உலர் பழங்கள் தயாரக இருந்தன. விஜய் சரியாக 5.20 மணிக்கு வந்தார். தலையில் தொப்பியுடன் வந்த விஜய்யை காண அங்கு ரசிகர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், பவுன்சர்ஸ் விஜய்யை பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர்.

சரியாக 6.15 மணிக்கு ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைதியாக வந்துநோன்பு திறந்த விஜய் அனைவருக்கும் நன்றி சொல்லி ஒருசில வார்த்தைகளை மட்டுமே பேசினார். அரசியல் ரீதியாக எதுவும் பேசாமல், தனது கட்சி கொடி, பெயரை கூட சொல்லாமல் இது ஒரு மதம்  சம்பந்தப்பட்ட நிகழ்வாகவே பார்த்து பங்கேற்று சென்றார். இந்த நிலையில் விஜய் ரமலான் நோன்பு திறந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: விஜயின் புது கெட்டப்பை பார்த்து வெறியான தொண்டர்கள்... தவெக இஃப்தார் நிகழ்ச்சியில் பரபரப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share