×
 

பெண் எம்.எல்.ஏ., சென்டிமெண்ட்- அதிமுக இனி, வாழ்நாள் முழுவது எதிர்கட்சிதான்… சிண்டு முடியும் சீனியர்ஸ்..!

அப்போதெல்லாம் 'தலையாட்டி' கொண்டிருந்த அதிமுகவினர், எடப்பாடியார் பொறுப்பேற்ற பிறகு, லோக்கல் அரசியலில் திமுகவினரைவிட 'வாலாட்டி' கொண்டுள்ளார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கும், பெண் எம்.எல்.ஏ., ஒருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலால் விழி பிதுங்கி நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஒரு புறம் ஓ.பி.எஸ் அஹிம்சை போராட்டம் என வெளியே சொல்லிக் கொண்டு வழக்குமேல் வழக்கு தொடுத்து ரகசியம் வைத்திருப்பதாக காய் நகர்த்தி வருகிறார். டி.டி.வி.தினகரன், சசிகலா என வரிசை கட்டி நிற்கையில், திடீர் போர்கொடி தூக்கி நிற்கிறார் செங்கோட்டையன். தேர்தல் ஆணையம் விசாரணை… இன்னும் யார் யார் கிளம்புவார்களோ என்கிற பதற்றம் எல்லாம் வாட்டி வதைக்க, தற்போது தன்னுடன் இருக்கும் ஆதவாளராக இருப்பவர்களே பள்ளம் பறிக்கிறார்களோ? என்கிற பயத்தில் நடுங்கிப் போய் கிடக்கிறார் எடப்பாடியார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமாவனவர்கள். 

திமுகவில் உள்ளவர்கள் அந்தந்த பகுதிகளில் குறு நில மன்னர்களாக கோலோச்சி வருகிறார்கள் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே குற்றம்சாட்டி வந்திருக்கிறார். அப்போது அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரையும் வாலாட்டாமல் பார்த்துக் கொண்டதால் அவர் திமுகவினர் மீதான குற்றச்சாட்டை தில்லாக சொல்லி வந்தார். அப்போதெல்லாம் 'தலையாட்டி' கொண்டிருந்த அதிமுகவினர், எடப்பாடியார் பொறுப்பேற்ற பிறகு, லோக்கல் அரசியலில் திமுகவினரைவிட 'வாலாட்டி' கொண்டுமட்டுமல்ல… ஹிட்லராகவே நடந்து கொண்டு தொண்டர்களை கையாண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: கயல்விழிக்கு ரூட் கிளியர்… நாதக-வில் காளியம்மாள் விலகல்..? திமுக- அதிமுகவுக்கு தம்பிகள் எச்சரிக்கை..!

 

கட்சியை வழி நடத்தி செல்ல முயற்சிக்காமல்,முந்திக் கொண்டு ஊடகத்தின் முன் பேட்டி கொடுப்பது, எடப்பாடியாருக்கு விஸ்வாசத்தை காட்டுகிறேன் பேர்வழி என வேஷ வார்த்தை வீசுவது என அதிமுகவை அழித்து வருகிறார்கள் என ரத்தத்தின் ரத்தங்கள் கொதிக்கிறார்கள்.இதற்கு சமீபத்திய ஒரு உதாரணத்தையும் முன் வைக்கிறார்கள் உண்மையான திண்டுக்கல் அதிமுகவினர். விஷயம் இதுதான். திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை  தொகுதியில் மூன்றாவது முறையாக எஸ்.தேன்மொழி எம்.எல்.ஏ-வாக தொடர்ந்து வருகிறார்  இவர், இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ ஆனபோது மட்டும் தான் அதிமுக ஆட்சியில் இருந்தது.

மற்ற இருமுறையும் அதிமுக எதிர் கட்சியாகவே இருந்தது. இப்படியொரு சென்டிமென்ட் இருப்பதாகச் சொல்லி  தங்களுக்கு எதிராக தனி லாபி செய்யும்  எம்.எல்.ஏ தேன்மொழியை கட்டம் கட்ட  திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும் ஸ்கெட்ச் போட்டு இருக்கிறார்கள்.இதுகுறித்து எடப்பாடியாரிடம், ‘4வது முறையாக சீட் கொடுக்காதீர்கள். தேன்மொழி வெற்றி பெற்றால் மீண்டும் நாம் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியாகத்தான் இருப்போம். வேறு ஒருவரை நாங்களே சொல்றோம். அவரை நிறுத்தலாம்’ என வெடி வைத்திருக்கிறார்கள்.

இந்த தகவல் எப்படியோ, எம்.எல்.ஏ., தேன்மொழி காதுக்கு சென்று விட, அவர் தனது தரப்பில் இருந்து,'‘திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசனும், நத்த, விஸ்வநாதனும் தொண்டர்களை அரவணைத்துச் செல்வதில்லை.தொகுதிக்கே செல்வதில்லை. அதிமுகவில் இருந்து மாவட்ட தலைமைப் பதவிக்கு கொஞ்சம் இளம் ரத்தம் பாய்ச்சுங்கள். நான் தீவிரமாக தொகுதிக்கு செல்வதால்தான் ஜெயிக்கிறேன். கட்சி பிரிந்து நிற்பதால்தான் தோல்வி அடைகிறோம்.மற்றபடி சென்டிமென்டெல்லாம் ஒன்றும் கிடையாது. எனக்குத்தான்  அடுத்தும் சீட் தர வேண்டும்’ என அடம் பிடித்து முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளையும் குத்தி காட்டி புகார் தெரிவித்துள்ளார்'' என்கிறார்கள்.

 

இதை கேள்விப்பட்ட முன்னாள் அமைச்சர்களான அவர்கள் இருவரும், ''கடைசியிலே நமக்கே இந்தம்மா ஆப்பு வைக்கும் போலயே… விடக்கூடாது'' என அடுத்த புகாரை தட்டிவிட தயாராகி வருகிறார்களாம். இப்படியே போனால் அதிமுகவில் தொண்டர்களே இல்லாமல் போய், தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள். இந்த விவராகத்தில், 'பூட்டு' யாருக்கோ..?

இதையும் படிங்க: 117/117 கேட்கும் விஜய்..! 60 ஐ தாண்டாத எடப்பாடி.. சேருமா? சேராதா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share