குளிர்பானத்தில் மயக்க மருந்து..! ஆடைகளைக் கழற்றி வீடியோ..! இளம் பெண்ணை நாசமாக்கிய வேலூர் சம்பவம்
குளிர்பானத்தில் மயக்க மருந்து..! ஆடைகளைக் கழற்றி வீடியோ..! இளம் பெண்ணை நாசமாக்கிய வேலூர் சம்பவம்
இளம் பெண் ஒருவரை நான்கு பேர் கூட்டு சேர்ந்து சதி செய்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. வேலூர் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் சேர்ந்த 30 வயது இளம் பெண் ஒருவர் தனது நிலத்தை விற்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கிராமத்தில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த அல்தாப் தாசின் என்பவரிடம் 15 லட்சம் ரூபாய்க்கு சீட்டு கட்டி வந்துள்ளார்.
அல்தாபிடம் தொழில் ரீதியாக நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க அவரது மூளைச்சலவை பேச்சால் கவர்ந்து போன அந்த இளம் பெண் தனக்கு தெரிந்தவர்களையும் சீட்டு குரூப்பில் சேர்த்து விட்டு 1 கோடியே 75 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து கொடுத்துள்ளார்.
ஏல சீட்டு எடுத்த வகையில் தன்னை நம்பி சீட்டு கட்டியவர்களுக்கு ரூபாய் 40 லட்சம் வரை திரும்ப பெற்றுக் கொடுத்துள்ளார் அந்த இளம் பெண்..ஒரு கட்டத்தில் மீதமுள்ள சேர வேண்டிய பணத்தை அந்த பெண் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை...! கைதான ‘சைக்கோ நபர்’ குறித்து வெளியான பகீர் தகவல்...!
இது தொடர்பாக அல்தாப் தாஸின் இடம் அடிக்கடி அந்தப் பெண் வற்புறுத்தி கேட்டு வந்த நிலையில் வேலூர் நகரத்திற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அல்தாப் கூறியுள்ளார்
தற்போது அதிக பணத்தை திரும்ப கொடுப்பதால் உள்ளூரில் கொடுத்தால் பிரச்சினையாகும் அதனால் வேலூரில் உள்ள ஒரு விடுதிக்கு வாருங்கள் என அந்த லாட்ஜின் முகவரியையும் கொடுத்து வரச் சொல்லி உள்ளார்கள்.
அல்தாபின் இந்த பேச்சை நம்பிய அந்த பெண்ணும் அவரது தாயாரும் அவர்கள் குறிப்பிட்ட அந்த லாட்ஜுக்கு சென்றுள்ளனர் அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் அமர்ந்து கொண்டு பணத்தை கொடுக்க முடியாது என்றும் பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
பின்னர் நயமாக பேசி அந்த இளம் பெண்ணின் தாயை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதற்கு முன்னதாக அந்த இளம்பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் ஆகியோர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணிற்கு நினைவு திரும்பியவுடன் அவர் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்ப அவர்களோ உனது ஆடைகளை கழற்றி முழு உடலையும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளோம் இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் இதை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
இதனை அடுத்து அந்த இளம் பெண் அவரது தாயாரோடு சேர்ந்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இடம் புகார் மனு அளித்து இருந்தார். அந்த இளம் பெண்ணின் புகார் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை ஏமாற்றியதோடு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வேலூர் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நின்றது சிசுவின் இதயத்துடிப்பு..! ரயிலில் இருந்து தள்ளிவிட்டதால் நடந்த கொடூரம்..