எங்கெல்லாம் தங்களால் வெற்றி பெற முடியவில்லையோ அந்த மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையை குறைக்கவும், எங்கெல்லாம் தங்களால் வெற்றி பெற முடிகிறதோ அங்கெல்லாம் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிடுவதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கலந்து கொண்டு பேசினார்.
இதையும் படிங்க: #FairDelimitation மத்திய அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும்.. ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் வலியுறுத்தல்..!
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 இடங்களில் பஞ்சாப்பில் இருந்து 13 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் சதவிதம் என்பது 2.94 சதவிதம் ஆகும். ஒருவேளை மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு மேற்கொண்டால் பஞ்சாப்புக்கு கூடுதலாக 5 இடங்கள் கிடைக்கலாம். அதாவது 18 தொகுதிகளாக எங்கள் எண்ணிக்கை உயரலாம். ஆனால் ஒட்டுமாத்த இடங்களில் பஞ்சாப்பின் சதவீதம் என்பது 2.11 சதவிதமாக குறையும். இதனை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும்.

உத்தரப்பிரதேசத்தில் அதாவது இந்திமொழி பேசும் மாநிலங்களில் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரச திட்டமிடுகிறது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் என்ன ஆவது? அதாவது எங்கெல்லாம் தங்களால் வெற்றி பெற முடியாதோ அங்கெல்லாம் எண்ணிக்கையை குறைத்தும், வெற்றி பெற வாய்ப்புள்ள மாநிலங்களில் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் வஞ்சக நாடமாடுகிறது மத்திய அரசு. மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை பஞ்சாப் முற்றிலுமாக எதிர்க்கிறது. ஆம் ஆத்மியின் நிலைப்பாடு இதுதான் என்று அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், கூட்டாட்சி என்பது பரிசு அல்ல; உரிமை என்று மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புவதாக பாரதிய ராஷ்ட்ரிய சமிதியின் செயல்தலைவர் கே.டி.ராமராவ் கூறியுள்ளார். உரிமைகளைக் காக்க போராடுவதற்கான இன்ஸ்பிரேசன் தமிழ்நாடு என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: #FairDelimitation இந்தியாவின் ஆன்மாவுக்கு பாதிப்பு - பினராயி விஜயன்.. சிறப்பாக செயல்பட்டதற்கு தண்டனையா? - ரேவந்த் ரெட்டி..!