மத்திய பிரதேசத்தில் திகம்கர் மாவட்டம், லிதோரடால் கிராமத்தைச் சேர்ந்தவர் தயானி சிங் கோஷ் (84). இவர் தனது கடைசி காலத்தில் இளைய மகன் தேஷ்ராஜுவுடன் வசித்து வந்தார். மூத்த மகன் கிஷன் கிராமத்துக்கு வெளியே சற்று தொலைவில் வசித்து வந்தார். இந்நிலையில் வயோதிகம், உடல்நலக்குறைவு காரணமாக தயானி சிங் உயிரிழந்தார். அஞ்சலிக்காக உடல் தேஷ்ராஜூவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
தந்தை மரண செய்தியைக் கேள்விபட்டவுடன் கிஷன் தம்பி வீட்டுக்கு வந்தார். இறுதிச் சடங்கு முன் ஏற்பாடுகளில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஈடுபட்டனர். அப்போது மூத்த மகன் என்கிற வகையில் தந்தையின் இறுதிக் காரியங்களை தான்தான் செய்ய வேண்டும் என்று கிஷன் கேட்டுள்ளார். ஆனால், இதை அவருடைய தம்பி தேஷ்ராஜ் ஏற்கவில்லை.
இறுதிச் சடங்குகளை தான் தான் செய்ய வேண்டும் என்று தந்தை விரும்பினார். எனவே தான் தான் இறுதிக் காரியங்களைச் செய்வேன் என்று வாதிட்டுள்ளார். இதனால், அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் கிஷன் மதுபோதையில் இருந்தார். இந்தச் சண்டையில் கிஷன் இறுதிச் சடங்கு செய்ய தந்தையின் உடலில் பாதியையாவது எனக்குத் தர வேண்டும் என்று பிடிவாதம் காட்டத் தொடங்கிவிட்டார். இதனால் உறவினர்களும் கிராமத்தினரும் திகைத்து போயினர். இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை.
இதையும் படிங்க: வங்கதேசம் இந்திய எல்லையை திறந்து வைக்க விரும்புவது ஏன்..? மிரட்டி பணம் பறித்தல், கடத்தல்... பாகிஸ்தான் தொடர்பு தெரியுமா..?
தந்தையின் பாதி உடல் வேண்டும் என்று கிஷன் உறுதியாக இருந்தார்.
இதனால், கிராம மக்கள் இதுதொடர்பாக ஜதாரா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். மூத்த மகன் கிஷனை சமாதானப்படுத்தி அங்கிருந்து போலீஸார் அழைத்துச் சென்றனர். இதையடுத்து இளைய மகன் தேஷ்ராஜ் தந்தையின் இறுதிக் காரியங்களைச் செய்து முடித்தார்.
இதையும் படிங்க: தேசத்தை உலுக்கிய ‘கருப்பு பட்ஜெட்’ ! எப்போது தாக்கலானது, காரணம் என்ன?