திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியை சேர்ந்த நாகராஜ் மகன் சத்யநாராயணன் . 20 வயதான இவர் கோவை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கு முன்னர் மாணவர் சத்ய நாராயணன் வெளியிட்டுள்ள ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . அதில் தான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளதாகவும், பயமாக இருக்கிறது என்றும், மேலும் ஏதாவது செய்து விடுவார்கள் என்ற அச்சமாக இருக்கிறது என்றும் ஆசிரியைக்கு அழுது கொண்டே பேசியுள்ளார்.

இதை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்இதனிடையே தற்கொலை செய்து கொண்ட மாணவன் சத்ய நாராயணா வகுப்பில் மிக சிறந்த மாணவனாகவும் ஒழுக்கமுள்ள மாணவனாகவும் திகழ்ந்ததாகவும் அதே வேளையில் பயந்த சுபாவம் கொண்ட மாணவனாகவும் இருந்த சத்திய நாராயணாவை மூன்று மாணவர்கள் பிராங்க் செய்து தாக்கியது தங்களுக்கு தெரிய வந்த நிலையில் அந்த மூன்று மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இது குறித்த தகவல் அனுப்பியதுடன் அந்த மூன்று மாணவர்களையும் கல்லூரியில் இருந்து 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தெரிவித்த தகவலை முன்வைத்து மாணவன் இறப்புக்கு காரணமான சக மாணவன் சூர்யாவையும், உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என மாணவனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தலைமையின்றி தள்ளாடும் பல்கலைக்கழகங்கள். கேள்விக்குறியாகும் மாணவர்கள்...