மோடியை பெருமைப்படுத்திய குவைத்... இஸ்லாமிய நாட்டில் இதயம் நிறைத்த கவுரவம்
பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் அளிக்கப்பட்ட 20வது சர்வதேச கவுரவம் இது.
பிரதமர் மோடிக்கு குவைத்தின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’இன்று வழங்கப்பட்டது. குவைத்தின் எமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு 'தி ஆர்டர் ஆஃப் முபாரக் தி கிரேட்' என்ற உயரிய சிவிலியன் விருதை வழங்கி கௌரவித்தார். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றுள்ளார்.
பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் அளிக்கப்பட்ட 20வது சர்வதேச கவுரவம் இது. ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது குவைத்தின் மாவீரர் பட்டம். இந்த விருது நாட்டுத் தலைவர்கள், வெளிநாட்டு இறையாண்மையினர், வெளிநாட்டு அரச குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு நட்பின் அடையாளமாக வழங்கப்படுகிறது.
முன்னதாக இந்த விருது வெளிநாட்டு தலைவர்களான பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ், ஜார்ஜ் புஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று குவைத்தின் பயான் அரண்மனை சென்றடைந்த பிரதமர், அங்கு அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. அவரை குவைத் பிரதமர் ஷேக் அகமது அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா அன்புடன் வரவேற்றார்.
இதையும் படிங்க: பி.கே- ஆதவ் அர்ஜூனாவிடம் சிக்கிய திமுக-வினரின் ரகசியம்..? பென் நிறுவனத்தையும் பிடரியில் அடிக்கும் உ.பிக்கள்..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் எமிர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், இந்தியா-குவைத் உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பரஸ்பர முதலீடு, வர்த்தகம், எரிசக்தி ஆகிய துறைகளில் விவாதங்கள் நடைபெற்றன.
இரண்டு நாள் பயணமாக மோடி சனிக்கிழமை இங்கு வந்தார். இது 43 ஆண்டுகளில் இந்த வளைகுடா நாட்டிற்கு ஒரு இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முதல் பயணம் இது. குவைத் சென்ற இந்தியப் பிரதமர் கடைசியாக 1981 ல் இந்திரா காந்தி. குவைத்தின் சிறந்த வர்த்தக பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று. குவைத்தில் இந்திய சமூகம்தான் மிகப்பெரிய வெளிநாட்டவர் சமூகம்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு பி.கே..! திமுகவுக்கு ஷோ டைம்... ‘வா ராசா வா... நீ யாருன்னு இப்போ தெரிஞ்சிடும்..’ பிரசாந்த் கிஷோருக்கு சவால்..!