சும்மா ஜெட் வேகத்தில் இனி ரயில் பயணம் ..மாஸ் அறிவிப்பு வெளியிட்ட இந்திய ரயில்வே..!
அதிவிரைவு பயணத்தை உறுதி செய்து பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் 138 ரயில்களின் வேகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
ரயில் பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 138 எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் மற்றும் பேசஞ்சர் ரயில்களின் வேகத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பயணிக்கும் ரயில்கள் பலவும் வேகத்தை கூட்டி பயண நேரத்தை குறைக்கவுள்ளன. அதில் முதல் இடத்தை பிடித்திருப்பது கன்னியாகுமரி - நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ். இது மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் சென்று பயணித்து முந்தைய பயண நேரத்தை 80 நிமிடங்கள் வரை குறைக்கவுள்ளது.
இதையடுத்து கோவை - ராமேஸ்வரம் ரயில், மங்களூரு, திருவனந்தபுரம், திருவண்ணாமலை - தாம்பரம் பேசஞ்சர் ஆகியவை தலா 30 நிமிடங்கள், சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் ரயில் 25 நிமிடங்கள், மதுரை - லோக்மான்ய திகல் டெர்மிஸ் ரயில் 20 நிமிடங்கள், திருச்சி - கரூர் பேசஞ்சர் ரயில், மதுரை - போடிநாயக்கனூர் பேசஞ்சர் ரயில் தலா 10 நிமிடங்கள் என பயண நேரம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, போடிநாயக்கனூர், செங்கோட்டை ஆகிய நகரங்களுக்கு செல்லும் பயண நேரத்தை சுமார் 30 நிமிடங்கள் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . ரயில்களின் வேகத்தில் மாற்றம் செய்ய தண்டவாள கட்டமைப்பு, சிக்னலிங் தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன .
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ..ரயில் தள்ளிக்கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை..நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு