அல்பாபெட்டின் கூகுள் நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது என்று தி இன்பர்மேஷன் நாளேடு தெரிவித்துள்ளது. ஆனால், கூகுள் பதில் அளிக்கவில்லை. ஆன்ட்ராய்ட் பிரிவு, பிக்சல் மொபைல் போன், க்ரோம் ப்ரவுசர் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து நூற்றுக்கணக்கில் ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

தி இன்பர்மேஷன் தளத்துக்கு கூகுள் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில் “சில தளங்களை இணைத்தது, குழுக்களை கடந்த ஆண்டு ஒன்றாக இணைத்ததில் இருந்து, நாங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், திறம்படவும் செயல்படுவதில் கவனம் செலுத்தியுள்ளோம், ஜனவரியில் நாங்கள் வழங்கிய ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்துடன் கூடுதலாக சில ஆட்குறைப்பையும் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
கூகுள் உள்ளிட்ட சில பெரிய மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு எடுப்பதைக் குறைத்துவிட்டு, செயற்கை நுண்ணறிவு மேம்பாடு, டேட்டா சென்டர் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பல இடங்களில் தொடரும் பணி நீக்கம்..! 40 வயதுடைய நபர்களே முதல் டார்கெட்..! தப்பித்துக் கொள்வது எப்படி?

ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா, நிறுவனத்தில் திறன் குறைவாக செயல்பட்ட 5% ஊழியர்களை கடந்த ஜனவரி மாதம் வேலையிலிருந்து நீக்கியது. அதற்குபதிலாக ஏஐ பொறியாளர்களை வேலைக்கு எடுத்தது. மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த செப்டம்பரில் 650 பேரை வேலையிலிருந்து நீக்கியது, அமேசானா நிறுவனம் பல்வேறு பிரிவுகளைக் குறைத்து, தகவல்தொடர்பு துறையை சுருக்கி ஆட்களைக் குறைத்தது, ஆப்பிள் நிறுவனம் டிஜிட்டல் சேவைப் பிரிவில் இருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் பலரையும் நீக்கியது.
கடந்த 2023 ஜனவரியில் அல்பாபெட் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பேரை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதியோருக்கான சலுகை பறிப்பு.. ரயில்வேக்கு ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய்..!