சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு பிரபல தொழிலதிபரும் வேல்ஜன் குழுமத்தின் தலைவருமான வேல்மதி சந்திரசேகர் ஜனார்த்தன ராவை 73 முறை கத்தியால் குத்தி கொன்ற பேரன்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சோமாஜிகுடாவில் பிரபல தொழிலதிபரும் வேல்மதி குழுமத்தின் தலைவருமான வேல்மத் சந்திரசேகர ஜனார்த்தன ராவ் ( 86 ) பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
அவர் சமீபத்தில் தனது சொத்துக்களை தனது வாரிசுகளுக்கு பிரித்து அளித்ததாக கூறப்படுகிறது. சொத்துக்கள் பகிர்வதில் ஜனார்த்தன ராவ் தனது மூத்த மகளின் மகன் ஸ்ரீகிருஷ்ணாவை நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தார். மறுபுறம், இளைய மகள் சரோஜினி தேவியின் மகன் கீர்த்தி தேஜாவின் ( 29 ) பெயருக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வழங்கினார்.

இதையும் படிங்க: குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு சரோஜினி தேவியும் அவரது மகன் கீர்த்தி தேஜாவும் ஜனார்தன ராவின் வீட்டிற்குச் சென்றனர். அப்போது அவர்களுக்கிடையே சொத்து தகராறு குறித்த விவாதங்கள் நடந்தன. பரம்பரை சொத்துக்கள் தொடர்பாக தனது தாத்தா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பேரன் கீர்த்தி தேஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மோதல் அதிகரித்த நிலையில் அவரது தாயார் சரோஜினி தேவி டீ மற்றும் தண்ணீர் எடுக்க சமையலறைக்குள் சென்றபோது கீர்த்தி தேஜா தனது தாத்தாவை ஏற்கனவே திட்டமிட்டு கொண்டு வந்த கத்தியால் 73 முறை தனது தாத்தாவை குத்தியுள்ளார். தந்தையின் அழுகை சத்தம் கேட்டு வெளியே வந்த சரோஜினி தேவியையும் கீர்த்தி தேஜா கத்தியால் குத்தியுள்ளார். பாதுகாப்பு காவலர் வீர பாபு அவரைத் தடுக்க முயன்றார், ஆனால் அவர் அவரை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார். சரோஜினி தேவிக்கும் நான்கு இடங்களில் காயமடைந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மற்ற குடும்ப உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் ஜனார்த்தன ராவ் இறந்துவிட்டார். காயங்களால் அவதிப்பட்டு வந்த சரோஜினி தேவியை சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சகுட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜனார்தனராவ் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டனர். கொலை செய்த கீர்த்தி தேஜா அமெரிக்காவில் முதுகலை படிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் ஐதராபாத் வந்ததும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து கீர்த்தி தேஜாவை கைது செய்த போலீசார் ஜனார்த்தன ராவ் சொத்து தகராறு மற்றும் கீர்த்தி தேஜாவின் பின்னனி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவை புறக்கணித்துவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவமா..? போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன்..!