அயோத்தி ராமர் கோவிலில் விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை மீறி, குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், கோவிலுக்குள் புகைப்படம் எடுத்திருக்கிறார். அவரை கைது செய்த போலீசார், அதற்கு பயன்படுத்திய விலை உயர்ந்த 'கூலிங் கிளாஸ் கேமரா'வை பறிமுதல் செய்தனர். சமீபத்தில் கட்டி கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற அயோத்தி ராமஜென்ம பூமி கோவில், உலக அளவில் பக்தர்களை ஈர்த்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, கோவிலில் புகைப்படங்கள், வீடியோ எடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக கடுமையான கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஜானி ஜெயக்குமார் என்பவர் தான் அணிந்திருந்த கூலிங் கிளாஸில் கேமராவை மறைத்து கொண்டு சென்று, கோவிலில் உள்ளே சில புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். கூலிங் கிளாஸில் இருந்து திடீரென பளிச் ஒளி வந்ததால், பாதுகாவலர் ஒருவருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ‘இந்து- முஸ்லீம் மோதல் வேண்டாம்...’அம்பேத்கர் பிரச்சனைக்கு அணை போடுகிறாரா மோகன் பகவத்..?
அந்த மர்ம மனிதரை மடக்கி பிடித்த காவலர் அவரை போலீஸ் ஒப்படைத்தார். அவரிடம் சோதனை நடத்திய போது ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் விலை மதிப்புள்ள உயர்ந்த ரக கூலிங் கிளாஸ் கேமரா மூலம் இந்த படங்களை அவர் எடுத்திருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் சூப்பிரண்டு பலராமாச்சாரி துபே தெரிவித்தார். விசாரணையில் அவருடைய பெயர் ஜானி ஜெயக்குமார் என்றும், குஜராத் மாநிலம் பரோடாவை சேர்ந்த தொழில் அதிபர் என்றும் தெரிய வந்தது.
அது உண்மையான தகவல்கள் தானா என்பதை உறுதி செய்வதற்காக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். அவரைப் பிடித்துக் கொடுத்த மாநில சிறப்பு பாதுகாப்பு படை வீரர் அனுராக் வாஜ்பாய்க்கு பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: குரல் கொடுத்த முதல் நடிகர் ..!பெண்ணுக்கு துணை நிற்பேன்.. சிவகார்த்தி அதிரடி