ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ரவீனா. இவர் பிரபல யூடியூபராக வலம் வருகிறார். பிரவீனும் ரவீனாவும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். மேலும் இந்த தம்பதியருக்கு முகுல் என்ற ஆறு வயது மகன் உள்ளார். பிரவீனுக்கு குடி பழக்கம் இருப்பதாக தெரிகிறது. அவர் குடித்துவிட்டு தினமும் பிரவீனாவுடன் சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ரவீனா வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்ற நபருடன் ரவீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் போன்ற வீடியோக்களை எடுக்க ஆரம்பித்தனர்.

ஹரியானாவின் பிரேம்நகரில் அவர்கள் எடுத்த வீடியோக்கள் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தன. ஒரு வருடமும் மூன்று மாதங்களாக இருவரும் சேர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டனர். இதனால் அவர்களை சமூக வலைதள கணக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமானது. குறும்படங்கள் மற்றும் டான்ஸ் ரீல்ஸ்களால் இன்ஸ்டாகிராமில் ரவீனாவை சுமார் 34,000 பின்தொடர்ந்தனர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ரவீனா, வீடியோக்கள் உருவாக்குவதையே முழு நேரப் பணியாகக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரது யூடியூப் வீடியோ தொடரில் மற்ற நடிகர்களும் இடம்பெற்றனர். ஆனால் ரவீனாவின் கணவர் பிரவீனுக்கு இவர்களின் செயல்பிடிக்கவில்லை. மேலும் இருவரும் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார். குடும்பத்தினரும் ரவீனாவின் செயலை கண்டித்தனர்.
இதையும் படிங்க: மனைவியுடன் கள்ளத்தொடர்பு..! வாடகைக்கு குடியிருந்தவரை உயிருடன் புதைத்த உரிமையாளர்..!

ஒரு கட்டத்தில் ரவீனா மற்றும் அவரது கணவர் பிரவீன் இடையே சண்டை அதிகமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி அன்று, ரவீனா தனது இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலன் சுரேஷுடன் உல்லாசமாக இருப்பதை பிரவீன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது.
தங்களது கள்ளக்காதல் வெளி உலகத்திற்கு தெரியக்கூடாது என்பதால் ரவீனாவும் சுரேஷும் சேர்ந்து துப்பட்டாவால் பிரவீனைக் கழுத்து நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் அதிகாலை 2:30 மணியளவில், இறந்துபோன பிரவீனின் உடலை பைக்கில் எடுத்துச் சென்று, தின்னோட் சாலையில் உள்ள கால்வாயில் வீசி எறிந்தனர்.

பிரவீனின் குடும்பத்தினர் அவரைக் காணவில்லை என்று அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து பிரவீனை தேடி வந்தனர். மார்ச் 28 ஆம் தேதி ரவீனாவின் வீட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடிகால் ஒன்றில் பிரவீனின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின் இதை சந்தேக மரணமாக போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர்.
அப்போது மார்ச் 25ம் தேதி அதே பகுதியில் எடுத்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதில் ரவினாவும் சுரேஷும் பைக்கில் செல்வதும், அவர்களுக்கு இடையே பிரவீனின் உடல் இருப்பதும் தெரிந்தது. பின்னர் போலீசார் ரவினாவிடம் விசாரணை நடத்தினர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவரது கள்ளக்காதலன் சுரேஷையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீட்டை தாக்கியவர்களை விடக் கூடாது.. ரவுண்டு கட்டும் திமுக கூட்டணி கட்சிகள்.!!