சாலை விபத்துக்களில் தலையில் காயம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கவும், உயிரிழப்பைத் தடுக்கவும் தலைக்கவசம் மிக அவசியம். தற்போது வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாது பில்லியன் எனப்படும் பின்னால் அமருபவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு உத்தரவுகள் போடுவது எதற்காக என்றால் விபத்துகளின்போது உயிரிழப்புகளை தடுக்க தான். ஆனால் அதன் நோக்கத்தை உணராத சிலர் ஹெல்மெட் போடாமலேயே வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் விபத்துகளின் போது பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதையும் படிங்க: தொடரும் விசைத்தறியாளர்களின் போராட்டம்.. ஜவுளி உற்பத்தியில் 250 கோடி loss!

இதனால் அவர்களது குடும்பம் சொல்லெண்ணா துயரத்தை சந்திப்பார்கள் என்பதை எள்ளளவும் எண்ணுவதில்லை. அதனால் தான் ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வுகளை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை வலியுறுத்தும் வகையில் போலீசார் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தீவிரப்படுத்த திருவள்ளூர் மாவட்ட போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

அதன்படி மாவட்ட காவல்துறை மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து, விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வருகிற ஏப் 1 ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் பெட்ரோல் வழங்ககூடாது என போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் நோ ஹெல்மெட்...நோ பெட்ரோல் என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருவதாகவும்,ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாத நபர்களுக்கு பெட்ரோல் வழங்க கூடாது என்பதை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'மத்திய அரசு'-க்கு மாறிய மு.க.ஸ்டாலின்… ஒன்றிய அரசு அழைப்பு வீராப்பு என்னாச்சு..?