வண்ணமயமான ஹோலி பண்டிகையை இந்துக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஹோலா மொஹல்லா என்ற சீக்கியர்களின் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில், சீக்கியர்கள் ஆயுதங்கள் மற்றும் மேளங்களுடன் ஊர்வலங்களை மேற்கொள்கின்றனர். மேலும், தற்காப்பு கலை திறன்களை வெளிப்படுத்துகிறார்கள்.

ஹோலி மற்றும் ஹோலாவின் போது ஆனந்த்பூர் சாஹிப்பில் பாரம்பரியமாக மூன்று நாட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. ஆனால் பங்கேற்பாளர்கள் ஒரு வாரம் ஆனந்த்பூர் சாஹிப்பில் முகாமிட்டு, பல்வேறு சண்டை, வீரம் மற்றும் துணிச்சலின் காட்சிகளை அனுபவித்து மகிழ்கின்றனர். ஹோலா மொஹல்லா' என்ற வார்த்தைகள் 'ஒரு இராணுவத்தின் படையெடுப்பு' என்று பொருள்படுகிறது. வீரத்தை துணிவை உலகுக்கு எடுத்துக் கூறும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: ஹோலி கலர்ஸ் பிடிக்கலன்னா நாட்டை விட்டு போங்க.. உ.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு..!

கூடாரம் கட்டுதல், வாள் சண்டை, வெறுங்கையுடன் குதிரை சவாரி, வேகமாக ஓடும் குதிரைகளின் மீது நிமிர்ந்து நிற்பது போன்ற துணிச்சலான செயல்களை அவர்கள் மேற்கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி கடந்த கால தற்காப்பு மரபுகளை மதிப்பது மட்டுமல்லாமல், சமகால சவால்களை எதிர்கொள்ளும் போது ஒற்றுமை மற்றும் வலிமைக்கான ஒரு அணிவகுப்பு அழைப்பாகவும் செயல்படுகிறது.

இந்த பண்டிகை சந்திர மாதமான சேத் மாதத்தின் இரண்டாவது நாளில், வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும், இது உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் சீக்கியர்களை ஈர்க்கிறது. இந்த விழா தற்காப்புத் திறன்கள், கலாச்சார வெளிப்பாடுகள் மற்றும் ஆன்மீக பக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது.
பஞ்சாப்-இமாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள புனித நகரமான ஆனந்த்பூர் சாஹிப்பில் நடைபெறும் திருவிழாவைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஹோலா மொஹல்லா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்களின் பண்டிகையான ஹோலா மொஹல்லா கொண்டாட்டப்பட்டது. மேலும், அனந்தபூர் சாஹிப் பகுதியில் போர்த்திறனை வெளிப்படுத்தும் விதமாக குதிரையேற்றம் மேற்கொண்டு சீக்கியர்கள் சாகசம் நிகழ்த்தினர்.
இதையும் படிங்க: ‘ஹோலி’யன்று முஸ்லிம் ஆண்கள் ‘தார்பாலின் ஹிஜாப்’ அணியலாமே.. பாஜக எம்எல்ஏ கிண்டல் பேச்சு..!