"3 மொழிகள் மட்டுமல்ல, ஏன் பல மொழிகள் கூடாது? நான் 10 மொழிகளை ஊக்குவிப்பேன்" ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை மூலம் தென்னிந்தியாவில் ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாகவும், தென்னிந்தியாவில் மத்திய அரசின் ஹிந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழகத்தை மட்டும் இன்றி கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை மட்டுமல்ல, வடமாநிலங்கள் சிலவற்றையும் ஆதரவுக்கு அழைத்திருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், நாங்கள் தமிழநாட்டு முதல்வரைப்போல அல்ல என ஓங்கி அடித்துச் சொல்லி இருக்கிறார் ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு.

மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய அவர்,''3 மொழிகள் மட்டுமல்ல, ஏன் பல மொழிகள் கூடாது? நான் 10 மொழிகளை ஊக்குவிப்பேன். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 10 மொழிகளை ஊக்குவிப்பேன்.சர்வதேச மொழிகள் மாணவர்கள் படிக்கவும், அங்கு சென்று வேலை செய்யவும் உதவுகின்றன. நாம் தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தை ஊக்குவிக்க வேண்டும், ஆனால் மக்களுடன் எளிதில் பழகுவதற்கு இந்தியைக் கற்றுக்கொள்வது நல்லது.
இதையும் படிங்க: மகா சிவராத்திரியில் நடந்த சோகம்.. ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உட்பட 7 பேர் பலி..!

மொழி என்பது தொடர்புக்கான ஒரு வழிமுறை மட்டுமே... தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் பிற மொழிகள் உலகளவில் பிரகாசிக்கின்றன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அறிவு வேறு, மொழி வேறு. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சர்வதேச மொழிகள் உட்பட 10 மொழிகளை நான் ஊக்குவிக்கப் போகிறேன். மாணவர்கள் அங்கு படிக்கலாம், எங்கும் சென்று வேலை செய்யலாம். அவர்களுக்கு உங்கள் சேவைகள் தேவை. மூன்று மொழிகள் மட்டுமல்ல, பல மொழிகளையும் நான் ஊக்குவிப்பேன். தெலுங்கை ஊக்குவிக்க வேண்டியிருந்தது. வாழ்வாதாரத்திற்கான ஒரு சர்வதேச மொழியாக இருப்பதால், ஆங்கிலத்தையும் ஊக்குவிக்க வேண்டும். மக்களுடன் எளிதில் பழக இந்தி கற்றுக்கொள்வது நல்லது" எனத் தெரிவித்துள்ளார்
Andhra Pradesh CM Chandrababu Naidu-
"I will promote 10 languages in every University.
International languages help students to study, go and work there.
We should promote Telugu and English but It is better to learn Hindi, so that we can mingle with people easily." pic.twitter.com/InCk031DoL
— News Arena India (@NewsArenaIndia) March 5, 2025
சந்திரபாபு நாயுடுவின் இந்த கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. ''ஒரு முதல்வர் இப்படித்தான் சிந்திக்க வேண்டும். உங்களுக்கு அதிக மொழிகள் தெரிந்தால், அங்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அது மக்களின் செழிப்புக்கு பயனளிக்கும். பெரும்பாலான தெலுங்கர்கள் இதைத்தான் நம்புகிறார்கள். விளிம்பு நிலை மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும். ஆனால், முறையான கற்றலை ஆங்கிலம் மற்றும் தெலுங்கு/தமிழ்/மராத்தி/உள்ளூர் மாநில மொழி எதுவாக இருந்தாலும், இரண்டு மொழிகளாகக் குறைத்து, குழந்தைகள் ஆன்லைனில் கற்றுக்கொள்ள விரும்பும் எந்த மொழியையும் இரட்டை மொழி, பன்மொழிப் புலமையாளர்களை ஊக்குவிக்க முடியும் என்று நான் இன்னும் நினைக்கிறேன்'' எனத் தெரிவித்து வருகின்றனர்.

பட்டாதாரி இளைஞர் ஒருவர், ''ஆமாம், சந்திரபாபு நாயுடு மிகவும் புத்திசாலி அரசியல்வாதி. உங்கள் மொழியில் பெருமைப்பட ஒன்றுமில்லை. அது வெறும் தொடர்பு சாதனம். ஒவ்வொரு இந்தியனும் 4 வருட பட்டப்படிப்பு முடிவதற்குள், 22 வருட வாழ்க்கையில் குறைந்தது 10 மொழிகளையாவது தெரிந்து கொள்ள வேண்டும். எனக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. தனிப்பட்ட முறையில் எனக்கு 4 மொழிகள் தெரியும்'' எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர், ''மும்மொழிக் கொள்கை மூலம் மக்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் ஒரு தொலைநோக்குத் தலைவர் சந்திரபாபு நாயுடு. அவர் தனது சொந்த குடும்பத்தை ஆதரிக்கும் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி போலல்ல. திமுக இந்தியாவை உடைக்க இலக்கு வைக்கிறது. முடியாவிட்டால், மாநிலங்களை உடைக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால், குடும்பத்திற்காக மாவட்ட அளவில் பிரிக்க வேண்டும்.

அவர்கள் உண்மையிலேயே தமிழ் மீது அக்கறை கொண்டிருந்தால், அவர்களது பிள்ளைகளை முதலில் பொதுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, வழியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடைபிடிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
சந்திரபாபுவின் முடிவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. ''அப்படியானால் தெலுங்கு மண்ணில் ஒடியா, பெங்காலி, மராத்தி, கன்னடம், பஞ்சாபி, தமிழ், கொங்கணி, குஜராத்தி போன்றவற்றை உக்குவியுங்கள். ஐயா, அரசியல் சார்புக்காக உங்கள் சொந்த அடையாளத்தை இழக்காதீர்கள். ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அதை நாங்கள் திணிக்க முடியாது.

சந்திரபாபு நாயுடு இந்த விஷயத்தைத் திரிக்கிறார். மாநில வாரியப் பள்ளிகளுக்கு மட்டுமே இரு மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் இருக்கலாம். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம். இந்தி பிரச்சார சபைகள், ஜெர்மன், சமஸ்கிருதம் போன்றவை தமிழகத்தில் கற்றுக் கொடுக்க பயிற்சி வகுப்புகள் உள்ளன'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் பக்தர்களை தாக்கிய யானை கூட்டம்.. உடல் நசுங்கி பலியான பக்தர்கள்.. நிவாரணம் அறிவித்தார் பவன் கல்யாண்..